விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்
Subscribe to Oneindia Tamil
குவாலியர்:
இந்திய விமானப் படையின் போர் விமானமான மிராஜ்-2000 இன்று தரையில் விழுந்து நொறுங்கியது. விமானிபாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கிவிட்டார்.
குவாலியர் விமானப் படைத் தளத்தில் இருந்து இன்று பகல் 12.45 மணியளவில் இந்த விமானம் பயிற்சிக்காகக்கிளம்பியது. கிளம்பியபோதே அதன் ஒரு சக்கரமும் சில இயந்திரங்களும் கழன்று விழுந்தன.
அடுத்த சில நிமிடங்களில் விமானம் வயல்வெளியில் விழுந்தது. விமானம் தரையை நோக்கிப் பாயஆரம்பித்தவுடனேயே அதன் பைலட் ஸ்கூவாட்ரன் லீடர் கில் பாராசூட் மூலம் வெளியே குதித்துவிட்டார். இதனால்அவர் உயிர் தப்பினார்.
விமானம் விழுந்ததில் தரையில் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.
பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான மிராஜ் 2000 விமானங்கள் இந்திய விமானப் படையின் மிக முக்கிய அங்கம்வகிப்பவையாகும். பெரும்பாலும், விபத்துகளின்றி செயல்பட்டு வருபவை.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications