முகமது அலியின் காவல் மீண்டும் நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட டி.ஐ.ஜி. முகமது அலி, உதவி கமிஷனர் சங்கர்,மதுரை எல்.ஐ.சி. அதிகாரி சாது ஆகியோரின் காவல் 6வது முறையாக நீடிக்கப்ப்டடது.
அவர்கள் கைது இன்றுடன் 84 நாட்கள் ஆகிறது. சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்அவர்களை இன்று மீண்டும் காவல் நீட்டிப்புக்காக போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தனர்.கூடுதல் தலைமை மாநகர நீதிபதி அருள்ராஜ் முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்கள் காவலை அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முகமது அலியுடன் கைது செய்யப்பட்ட உதவி கமிஷனர் சங்கர் ஜாமீன் கேட்டு 3வது முறாைக இன்று அதேநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 29-ம் தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.
முகமது அலி கைதாகி இன்றுடன் 84 நாள் ஆகிவிட்டது. 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை என்றால், அவர் ஜாமீனில் வெளியே வர வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சிபிஐவழக்கறிஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.அதற்கு இன்னும் 6 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது என்றார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications