திமுக அரசியல் தீண்டாமை: பா.ஜ.க. புகார்
சென்னை:
பா.ஜ.கவிடம் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் தீண்டாமையைக் கடைபிடிப்பதாக அக் கட்சியின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் மதவாதக் கட்சியினர் என்று மறைமுகமாக பா.ஜ.கவை குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி. பாஜகவின் பெயரைக் கூட நேரடியாகசொல்லாமல் ஏன் இந்த அரசியல் தீண்டாமையை கருணாநிதி கடைபிடிக்க வேண்டும்?
பிள்ளையார் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவர்கள் யார், இந்துக்கள் புனிதமாகக் கருதும் நிகழ்ச்சிகளில் வன்முறையைத்தூண்டிவிட்டு மத மோதல்களுக்கு வித்திட்டது யார் என்பது கருணாநிதிக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டிக்கும் கருணாநிதி, பிள்ளையார் சிலையை உடைத்தவன்முறையாளர்களை கண்டிக்காமல் விட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
செருப்பு மாலை:
இந் நிலையில் இன்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான சுப்பராயனின் கட்-அவுட்டை வைத்து, அதற்கு சிலர்செருப்பு மாலை அணிவித்தனர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருதமலை மெயின்ரோட்டுக்கு அருகே பி.என்.புதூரில் கல்யாண மண்டப வாசலில் கட்-அவுட்டை வைத்து அதற்கு செருப்பு மாலைஅணிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆத்திரமடைந்தனர்.
ஏராளமான அளவில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திரண்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கட்-அவுட்டையும் செருப்புமாலையையும் அப்புறப்படுத்தினர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications