பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது: குடும்பங்களுக்கு ஜெ. உதவி
சென்னை:
உத்தராஞ்சல் மாநிலத்தில் மலையிலிருந்து பஸ் உருண்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 பேர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலும்,நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாலட்சுமி டிராவல்ஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 120 பேர் பத்ரிநாத் புனித யாத்திரைசென்றனர். டெல்லி வழியாக அவர்கள் பஸ்சில் பத்ரிநாத் சென்றபோது, உத்தராஞ்சல் மாநலம் சமோலி மாவட்டத்தில் மலைப் பாதையில்பயணித்தபோது, பஸ் 200 அடிப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், 13 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
மேலும் இருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியாயினர்.
பலியானோர் விவரம்:
ராமமூர்த்தி (75), சீதாராம் (71), ராஜன் (54), ராஜா (49), டி.எஸ்.ராவ் (58), சியாமளா (65), சுந்தர மகாதேவன் (64), சுந்த ராமன் (63),பாலுசந்த் (52), காமாட்சி (50), லட்சுமி (57), சுந்தர்ராஜன், விசாலாட்சி, சுந்தரம் அய்யர் (62), சரஞ்சித் சிங் (பஸ் டிரைவர்).
இந்த 15 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000, லேசானகாயமடைந்தவர்களுக்கு ரூ. 6000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, விபத்தில் பலியானோரின் உடல்கள் டெல்லியிலிருந்து இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றன.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications