அந்நியன் படப்பிடிப்பில் விபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அந்நியன் படத்திற்கான சண்டைக்காட்சி சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் உள்ள ஜெ.ஜெ. உள் விளையாட்டு அரங்கில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அந்நியன்படத்திற்கான சண்டைக் காட்சி கடந்த 10 நாட்களாக படமாக்கப்பட்டு வந்தது. அதாவது கதாநாயகன் அந்தரத்தில்பறந்து வந்து வில்லன்களை தாக்குவது போலவும், அதில் ஒரே சமயத்தில் 16 பேரும் சிதறி விழுவது போலவும்படமாக்கி வந்தார்கள்.

இக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயீன் அமைத்தார். நடிகர் விக்ரம் இரவு 10 மணி வரை நடித்துவிட்டுவீட்டுக்கு சென்று விட்டார். அதன்பிறகு வில்லன் நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள்.ஸ்டண்ட் நடிகர்கள் 16 பேர் இதில் கலந்து கொண்டனர்.

கதாநாயகனால் உதைக்கப்படும் வில்லன்கள் ராட்சத நிலைக்கண்ணாடியை உடைத்து வந்து விழுவது போலபடமாக்கவிருந்தார்கள். ஒரே சமயத்தில் 16 ஸ்டண்ட் நடிகர்களை ஒரு லாரியில் கம்பிகளை அந்தரத்தில் கட்டிஇழுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் லாரியை ஓட்டியவர் சற்று வேகமாக அதனை நகர்த்தி விட்டதால்கம்பி திடீரென்று அறுந்தது.

Vikramஇதனால் அந்தரத்தில் 80 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த 16 பேரும் கீழே இருந்த ராட்சத நிலைக்கண்ணாடியின் மீது விழுந்து படுகாயம் அடைந்தார்கள். உடனடியாக அனைவரும் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்கள். காயமடைந்தவர்களை ஷங்கரும், விக்ரமும் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம்விசாரித்தார்கள்.

இதில் கணேசன், விவேக் என்ற இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடுதிரும்பினார்கள்.

அந்நியன் படப்பிடிப்பில் இது மூன்றாவது விபத்தாகும். நடிகை சதா வில்லன் நடிகரிடம் அடி வாங்கும் காட்சியில்சதாவின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. ஒரு வாரத்துக்கு முன்பு தலைகீழாக தொங்கி நடித்த சம்மய்யா,சரவணன் என்ற இரு ஸ்டண்ட் நடிகர்கள் கீழே விழுந்து, அடிபட்டனர். அதில் சம்மய்யாவுக்கு தண்டுவடத்தில்பலத்த அடிபட்டு அவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+