வாசனுக்கு எதிராக இளங்கோவன் ஆதரவாளர்கள் ரகசிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன், இளங்கோவன் கோஷ்டிகளிடையிலான பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கோஷ்டிப் பூசலுக்குப் பெயர் போன காங்கிரஸ் கட்சி மீண்டும் கலகலக்கத் தொடங்கியுள்ளது. தென் மாவட்டகாங்கிரசில் இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்த 10 மாவட்டத் தலைவர்கள் சமீபத்தில் வாசனைக் கண்டித்துஅறிக்கை விட்டனர்.

இதையடுத்து 10 பேரையும் ஜி.கே.வாசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார். இது அங்கு கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் சென்னையில் இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ரகசியஆலோசனையில் இறங்கினர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் (முன்னாள் தலைவர் குமரி அனந்தனின்தம்பி), முன்னாள் எம்.எல்.ஏ. அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் வாசனை சரமாரியாகசாடி அனைவரும் பேசினர்.

மேலும், வாசன் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் கொடுக்கவும் அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்துமாற்றுமாறு கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு எதிராக நடந்த இந்த அதிருப்தி கோஷ்டியின் கூட்டத்தால் கோஷ்டிப் பூசல் புதியரூபத்தை எட்டியுள்ளது.

இளங்கோவனின் ஆதரவாளர்களின் இந்த ரகசிய ஆலோசனை குறித்து வாசனிடம் கேட்டபோது, அது பற்றிதனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

இந் நிலையில் இன்று இரவு சேலத்தில் இளங்கோவன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தை பிரமாண்டமாக நடத்த இளங்கோவன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காகவசந்தகுமார், அழகிரி உள்பட ஏராளமானோர் சேலம் சென்றுள்ளனர். அங்கும் ரகசிய ஆலோசனை கூட்டம்நடைபெறும் எனத் தெரிகிறது.

இது பற்றி இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், வாசன் கட்சியை பலப்படுத்த எந்தநடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாங்கள் கட்சியை பலப்படுத்தியும், உறுப்பினர்களை சேர்க்கவும்திட்டமிட்டுள்ளோம். இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளோம். இந்த கூட்டம் யாருக்கும்எதிரானது அல்ல என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+