மத்திய நிபுணர் குழு இன்று சென்னை வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் வறட்சி நிலைமைகளை நேரில் பார்வையிட மத்திய நிபுணர் குழு இன்றிரவு சென்னை வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 16ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில்வறட்சி நிவாரண பணிகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்துதமிழகத்தின் வறட்சி நிலைமைகளை நேரில் பார்வையிட நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி இந்த நிபுணர் குழு இன்று இரவு சென்னை வருகிறது. இக் குழுவின் தலைவராக வேளாண்மை துறைஇணை செயலாளர் ஏ.கே. அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் உள்ள மத்திய நீர்வள கமிஷன்இயக்குனர் சைதன்யமூர்த்தி, தோட்டக்கலைத் துறை கூடுதல் ஆணையாளர் டாக்டர் சுக்தேவ்சிங், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக செயலாளர் வெங்கடேசன்,

புகையிலை மேம்பாட்டு கழக இயக்குனர் மனோகரன், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக உதவி ஆலோசகர் சங்கரநாராயணன், குடிநீர் வழங்கல் துறை உதவி ஆலோசகர் ராஜசேகர், திட்டக்குழு ஆராய்ச்சி அதிகாரி ஆர்.டி.மிஸ்ராஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

இவர்கள் நாளை காலை கோட்டையில் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார்கள். பின்னர் அரசு உயர்அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதையடுத்து 2 குழுக்களாக பிரிந்து தமிமிகத்தின் பல்வேறுஇடங்களுக்கு சென்று வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு இருப்பதையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்செய்யப்படுவதையும் நேரில் பார்க்கிறார்கள். 29ம் தேதி இந்த குழுவினர் டெல்லி திரும்பி, ஒரு வாரத்துக்குள்அறிக்கை தயார் செய்து மன்மோகன் சிங்கிடம் கொடுக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+