கொடைக்கானல்: 100 வயது பாலம் இடிந்து விழுந்தது
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பெய்து வரும் கன மழைக்கு 100 ஆண்டு கால பழமை வாய்ந்த பாலம் உடைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. குறிப்பாககொடைக்கானல் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரி நிரம்பி தண்ணீர்சாலைகளில் ஓடத் தொடங்கியுள்ளது.
செண்பகனூர், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையினால், சில இடங்களில் மண் சரிவுஏற்பட்டுள்ளது. ஏரிப் பகுதி சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டபாலம் இடிந்து விழுந்தது.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாலத்தை சரி செய்யும் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பாலம் கடந்த 1882ம் ஆண்டு வெள்ளைக்கார மதுரை ஆட்சித் தலைவரான சர்ஹென்றி லெவின்ஞ் என்பவரால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications