கூட்டணியை உடைக்க ஜெ. முயற்சி: இளங்கோவன்
சேலம்:
காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார் என்றும் அவரது முயற்சி பலிக்கவில்லைஎன்றும் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
சேலம் இரும்பாலையை தொடர்ந்து அரசு நடத்த சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசுவேன். தொடர்ந்து இதுஅரசுத் துறையாக இருக்கவேண்டும். அப்போதுதான் லாபத்தில் செயல்படும்.
தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நாணய வில்லைகள் தயாரிப்பை மீண்டும் சேலம்இரும்பாலையிலேயே தயாரிக்க நிதி அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசுவேன்.
பிரதமரை இந்தியாவில் உள்ள எல்லா முதல்வர்களும் தொடக்கத்திலேயே சந்தித்து விட்டார்கள். ஜெயலலிதாவின்குருவான நரேந்திர மோடியே பிரதமரை சந்தித்து விட்டார். ஆனால் ஜெயலலிதா தாமதமாகத்தான் சந்தித்துஇருக்கிறார்.
தமிழகத்தின் நலனுக்காக ஜெயலலிதாவை நான் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் நான் சந்திக்க தயார்.தமிழ்நாட்டில் 12 மத்திய அமைச்சர்கள் இருக்கிறோம். நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழகத்திற்குவரும் நல்ல திட்டங்களை நிறுத்த மாட்டோம்.
டெல்லி சென்ற ஜெயலலிதா சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வில்லையென்றுகூறியிருக்கிறார். இப்போதுதான் வேதாளம் மரத்தைவிட்டு கீழே இறங்கி இருக்கிறது. அது மீண்டும் மரத்தில்ஏறிவிடக்கூடாது.
3 மாதத்திற்கு முன்பே ஜெயலலிதா பிரதமரை சந்தித்து இருந்தால் மத்தியக் குழு அப்போதே வந்திருக்கும்.அப்போதுதான் தமிழகத்தின் நிலை மோசமாக இருந்தது. இப்போது தமிழகத்தில் மழை பெய்து கொண்டுஇருக்கிறது.
இப்போது வறட்சிக் குழு வந்தால் தமிழ்நாட்டில் வறட்சியில்லை என்று சொல்வார்கள். ஜெயலலிதா தனிப்பட்டவெறுப்பு காரணமாக மக்களை மோசம் செய்யக்கூடாது. ஜெயலலிதா பல முகங்களில் பேசுகிறார். நேற்று ஒரு முகம்,இன்று ஒரு முகத்தில் பேசுகிறார். நாளை எந்த முகம் என்று தெரியாது.
பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்வது போல் ஜெயலலிதா ராஜிநாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.தமிழகத்தில் உருப்படியான காரியங்கள் எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் ஜனனி, ஜெயலட்சுமி ஆகியோர்செய்திகளை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா எதிர்பார்த்தது நடக்கவில்லை. இப்போது காங்கிரஸ்கூட்டணியை உடைக்க முயன்றார். அதுவும் பலிக்கவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிதொடரும்.
காங்கிரசில் ஆட்கள் அதிகம் என்பதால் கருத்து வேறுபாடு வரும். வாசன் உயரவேண்டும் என்பதே எனதுவிருப்பம். அவர் மத்திய அமைச்சரானாலும், அந்தமானுக்கு ஆளுநர் ஆனாலும் வரவேற்பேன்.
எனது ஆதரவாளர்கள் மீது வாசன் நடவடிக்கை எடுத்திருப்பது உள்கட்சி பிரச்சினை. இதை நாங்கள் சுமூகமானமுறையில் தீர்ப்போம். யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியை விட்டு நீக்கவில்லை. விளக்கம் கேட்டுஇருக்கிறார்கள். விரைவில் விளக்கம் சொல்வோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை
திமுக மாநாடு நடத்துகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் செய்து கட்சியை வளர்க்கிறார்.ராமதாஸ் தமிழகத்தின் அன்றாட பிரச்சினையை மக்களிடம் எடுத்துச்சொல்லி வருகிறார். கம்யூனிஸ்டு கட்சிகள்மாவட்டந்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் காங்கிரஸ் மட்டும் செயலற்று இருப்பது கட்சியைபாதிக்கும்.
தமிழக காங்கிரசை பற்றி மேலிடத்தில் எடுத்துச் சொல்லுவோம் என்றார் இளங்கோவன்.


Click it and Unblock the Notifications
