சென்னை: மாநகராட்சி தேர்தலில் பெரும் வன்முறை
சென்னை:
| தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது.சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நடந்த வாக்குப் பதிவின்போது திமுக, அதிமுகவினர் இடையே பெரும்கலவரம் மூண்டது. இந்த பயங்கர வன்முறையில் திமுக வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
அதிமுகவைச் சேர்ந்த குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்காவும் இந்த அடிதடியில் காயமடைந்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று இடைத் தேர்தல் நடந்தது. திமுகசார்பில் முத்துக் கிருஷ்ணன், அதிமுக சார்பில் சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7.30 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது. |
பூத் ஏஜென்டுகளை அக் கும்பல் கடுமையாகத் தாக்கியது. பின்னர் வாக்களிக்க வந்தவர்களையும் அக்கும்பல்விரட்டித்தது. இதைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் அங்கு கற்கள், உருட்டுக் கட்டைகளுடன் வந்துஅதிமுகவினருடன் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
கற்கள்,செருப்புகள், சேர்கள், சைக்கிள்கள் ஆகியவற்றை தூக்கி எறிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.உருட்டுக் கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர். திடீரென அரிவாள்களும் அங்கு வந்து சேர்ந்தன.
இதையடுத்து அரிவாள்களாலும் தாக்கிக் கொண்டனர். இதில் திமுக வேட்பாளர் முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சிதிமுக கொறடா கல்யாண சுந்தரம் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதிமுகவினர் சிலருக்கும்அரிவாள் வெட்டு விழுந்தது.
இந் நிலையில் திமுக வட சென்னை மாவட்டத் தலைவர் பலராமன், காங்கிரஸ் வட சென்னை தலைவர் ராயபுரம்மனோ ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் அங்கு குவிந்தனர். அதே போல அதிமுகவைச் சேர்ந்த குடிசைமாற்று வாரியத் தலைவர் பாலகங்கா, முன்னாள் அமைச்சர் மதுசூதனன், எம்.எல்.ஏ. சேகர் பாபு ஆகியோரும்ஆதரவாளர்ளுடன் திரண்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமானது. ஓட்டுச் சாவடியும் தாக்குதலில் இருந்துதப்பவில்லை. இதனால் வாக்களிக்க வந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினர்.
மோதல் நடந்து கொண்டிருந்தபோது எழும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி அங்குவந்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அவரது காரை தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன.இதையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் கலவரக்கும்பல் கலைந்தது. ஆனால், மீண்டும் திரண்டு மோதலில் ஈடுபட்டது. செருப்புகள், கற்கள், சைக்களிகள் எனகையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, மீண்டும் தடியடி நடத்தப்பட்டது. இதில் அதிமுக, திமுகவினர்பலர் காயமடைந்தனர்.
மோதலில் காயமடைந்த திமுகவினர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்ததிமுகவினரை அக் கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் நேரில்சென்று பார்த்தனர்.
பின்னர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் கூறுகையில், சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதையேஇந்த வன்முறைச் சம்பவம் காட்டுகிறது. இங்கு மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கோரி மாநிலத் தேர்தல்ஆணையர், மாநில ஆளுநர், டிஜிபி ஆகியோருக்கு தந்து அனுப்பியுள்ளோம்.
| போலீசாரின் முழு ஆதரவு, துணையோடு அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு திமுகவினரைத் தாக்கினர் என்றார்.
இந்த பெரும் வன்முறைச் சம்பவம் காரணமாக தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு அங்கு தொடர்ந்து வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மோதல் நடந்தபோது, அந்தப் பகுதியே போர்க் களம் போல காணப்பட்டது. அதேபோல தர்மபுரியிலும் அதிமுக, திமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. |
|
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு இன்று இடைத் தேர்தல்நடந்தாலும் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம்கொட்டாச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிக்குப் போட்டியிட தலித்கள் யாரும் முன்வரவில்லை.
மேலும் 614 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இதனால் காலியாகஉள்ள 1,124 பதவிகளில் 506 பதவிகளுக்கே இன்று தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் 1,091 பேர் களத்தில்உள்ளனர்
காலை 7.30 மணிக்கு இதற்கான வாக்குப் பதிவு தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரும்பாலானஇடங்களில் அமைதியாகவே வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
கிராமப் பகுதிகளில் 2,249 வாக்குச் சாவடிகளும் நகர்ப் பகுதிகளிலி 134 வாக்குச் சாவடிகளும்அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு மாலை 5.30க்கு முடிவடையும், நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும். 29ம் தேதி முடிவுகள்அறிவிக்கப்படும்.














Click it and Unblock the Notifications