மத்திய நிபுணர் குழு வருகை: ஜெயலலிதாவுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha and Central teamமுதல்வர் ஜெயலலிதாவுடன் மத்தியக் குழுவினர்

சென்னை:

தமிழகத்தின் வறட்சி நிலைமைகளை நேரில் பார்வையிட வந்திருக்கும் மத்திய நிபுணர் குழு உறுப்பினர்கள் இன்றுமுதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

தமிழகத்தின் வறட்சி நிலைமையை சமாளிக்க ரூ.1,680 கோடி அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம்அண்மையில் முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மத்திய உணவு, விவசாயத்துறைச் செயலாளர் அகர்வால், மத்திய ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் வெங்கடேசன் உள்பட எட்டு பேர்கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இக் குழுவினர் நேற்றிரவு சென்னை வந்தனர். இன்று காலை சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்துப் பேசினர். 5 நிமிடங்கள் முதல்வருடன் பேசியவர்கள் பின்பு தலைமைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும்நிதித் துறை செயலாளர் நாராயணன், வருவாய்த் துறை செயலாளர் சதாபதி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர்சாந்த ஷீலா நாயர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனையடுத்து அகர்வால் நிருபர்களிடம் பேசுகையில்,

வறட்சி நிலவரம் குறித்து ஜெயலலிதாவுடன் சுருக்கமான ஆலோசனை நடத்தினோம். கடந்த சில ஆண்டுகளாகபருவ மழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை குறித்து ஜெயலலிதா கூறினார். சென்னை குடிநீர்பிரச்சினை குறித்தும் எடுத்துச் சொன்னார்.

அடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து எங்களுக்குத் தேவையான தகவல்களைஅவர்களிடம் கேட்டுப் பெறுவோம் என்றார்.

நிபுணர் குழுவினர் நாளை 4 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிந்து, குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சிநிலைமையை ஆய்வு செய்கின்றனர். மத்திய உணவுச் செயலர் அகர்வால் தலைமையில் 4 பேர் குழு சென்னைகுடிநீர் ஏரிகளைப் பார்வையிட உள்ளனர்; இக் குழுவினருடன் தமிழக வருவாய்த் துறைச் செயலர் சதாபதிசெல்கிறார்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மற்றொரு குழுவினர் தமிழக வருவாய்த்துறை ஆணையர் சந்தானத்துடன் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் சென்று வறட்சி நிலைமையைஆய்வு செய்கின்றனர்.

நாளை மறுநாள் அகர்வால் தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளஏரிகள் மற்றும் பாசனப் பகுதிகளைப் பார்வையிடுகின்றனர். வெங்கடேசன் தலைமையிலான குழுவினர்தூத்துக்குடி மாவட்டத்துக்குச் சென்று வறட்சி நிலைமையை ஆய்வு செய்கின்றனர்.

வரும் வியாழக்கிழமை இரு குழுவினரும் தலைமைச் செயலகத்தில் தமிழக உயர் அதிகாரிகளுடன் மீண்டும்விவாதிக்கின்றனர். பின்னர் அன்றிரவு டெல்லி திரும்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+