இந்தியா, பாக். ஹாக்கி: இன்று 2வது போட்டி
குவெட்டா :
இந்தியா,பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் ஹாக்கி தொடரின் இரண்டாவது போட்டி இன்று பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில்நடக்கிறது.
கடந்த 24ம் தேதி கராச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்விஅடைந்தது. இந் நிலையில் இன்று 2வது போட்டி நடைபெறுகிறது. போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜெரார்ட் ராச்கூறுகையில்,
முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது பெரிய விஷயமல்ல. நமது அணியில் அனுபவமற்ற புதிய வீரர்களே அதிகம்உள்ளனர். இத் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார்.
கேப்டன் தீலிப் டர்க்கி கூறுகையில், முதல் போட்டியில் கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் வீணடித்து விட்டோம். இத்தகைய தவறுகள்இனி வரும் போட்டிகளில் நடக்காது. இளம் வீரர்களுக்கு அவர்கள் திறமையை நிரூபிக்க ஒரு சில போட்டிகள் தேவைப்படும்.எனவே அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.
இந்திய அணி வீரர்கள்: தீலிப் டர்க்கி, தேவேஷ் சவுகான், வில்லியம் சால்கோ, விரன் ரஸ்குன்ஹா, அட்ரியன் டி சவுஜா, ஹர்பல் சிங்,சந்தீப் சிங், விக்ரம் பிள்ளை, இக்னேஷ் டர்க்கி, ஆடம் சின்கிளையர், வினய், பிரபோத் டர்க்கி, விவேக் குப்தா, அர்ஜூன் ஹாலப்பா,சந்தீப் மைக்கேல், துஷார் கன்திகார் மற்றும் ஹரி பிரசாத்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்: வாசிம் அகமது (கேப்டன்), சல்மான் அக்பர், முகமது இம்ரான், இம்ரான் வார்சி, கசன்பர் அலி, நசீர்அகமத், சோயில் அப்பாஸ், ஜிசன் அஸ்ரப், அட்னன் மக்சூத், திலாவர் ஹுசைன், முடாஷர் அலி கான், காசிப் ஜவாத். சாகில் அப்பாசி,அப்துல் ஆஷிம் கான், இம்ரான் கான், ரேகன் பட், அட்னன் ஜாகிர், தாரிக் ஆஷிஷ், சபிர் ஹுசேன் மற்றும் அக்தர் அலி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications