ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சரண்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmi ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் முக்கியக் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் இளங்கோவன்இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஜெயலட்சுமியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் இந்த இளங்கோவன். மதுரை திடீர்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஜெயலட்சுமிக்கு உயர் அதிகாரிகளுடன் உள்ள தொடர்பைவைத்து தனது அக்காள் மகளுக்கு போலீஸ் வேலை வாங்க முயன்றார்.

இதற்காக ஜெயலட்சுமியிடம் சில லட்சங்களைத் தந்துள்ளார். ஆனால், ஜெயலட்சுமியால் வேலை வாங்கித் தரமுடியாமல் போகவே இளங்கோவனுக்கும் அவரது அக்காளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமியிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் இளங்கோவன். ஆனால், அதை உயர்அதிகாரிகளிடம் தந்துவிட்டதாக ஜெயலட்சுமி கூறவே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

இந் நிலையில் தான் ஜெயலட்சுமியை இளங்கோவன் தனது உறவினர்களுடன் சேர்ந்து கடத்தினார். ஆனால்,அவர்களிடம் இருந்து ஜெயலட்சுமி தப்பிவிடவே, அவரது தாயார், சகோதரர் மற்றும் மகன் ஆகியோரைக்கடத்தினார் இளங்கோவன்.

கடத்தியதோடு, அவர்களை ஒரு வீட்டில் பூட்டி வைத்தும் சித்திரவதை செய்துள்ளார்.

இதையடுத்துத் தான் தனது மகளையும் குடும்பத்தினரையும் இளங்கோவன் கடத்தியதாக நீதிமன்றத்திலும் காவல்நிலையத்திலும் புகார் தந்தார் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி.

இதனால் தான் ஜெயலட்சுமி விவகாரமே வெளியுலகுக்குத் தெரியவந்தது.

இந்த மனு மீதான நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடத்தலில் இளங்கோவனுக்கு உதவிய சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைப் பட்டறை அதிபர் முருகவேல் மற்றும் இளங்கோவனின் உறவினர்கள்உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

ஆனால், முக்கியக் குற்றவாளியான இளங்கோவன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.இதற்கிடையே இளங்கோவன் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந் நிலையில் இளங்கோவன் இன்று மதுரை குற்றவியல் நீதிபதி இந்திராணி முன் சரணடைந்தார். அவரை 15 நாள்காவலில் வைக்குமாறு நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+