விநாயகர் ஊர்வலம்: இல.கணேசன், ராமகோபாலன் கைது
சென்னை:
சென்னை நகரில் விநாயகர் ஊர்வலத்தின் போது தடையை மீற முயன்ற அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன், இந்து முன்னணிஅமைப்பாளர் ராம.கோபாலன் உள்ளிட்ட 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்து முன்னணி, இந்து மக்கள் உள்பட பல அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் சென்னையில் ஊர்வலமாககொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
இந்து முன்னணி அமைப்பினர் திருவல்லிக்கேணி, எழும்பூர் புதுப்பேட்டை, ஈ.வே.ரா.சாலை, முத்துசாமி ரோடுபுளியந்தோப்பு, ஐ.சி.எப். பெரம்பூர் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சிலைகளை கொண்டு சென்று கரைத்தனர்.ராமகோபாலன் திருவல்லிக்கேணி திருவட்டீசுவரன் பேட்டையில் உள்ள சிலைக்கு பூஜை செய்து ஊர்வலத்தைதுவக்கி வைத்தார்.
போலீஸார் நிர்ணயித்த பாதையில் இருந்து ஊர்வலம் விலகி, வேறு பாதையில் செல்ல முற்பட்டபோது,இல.கணேசன், ராம. கோபாலன், பாஜக மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர்கள்எச்.ராஜா, குமாரவேலு உள்ளிட்ட 115 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சிறிதுநேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
ஊர்-வ-லத்-தின் இ-று-தி-யில் பெரிய சிலைகளை கிரேன்கள் மூலம் தூக்கி கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர்.சிலைகளை உடைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால் சிலைகள் எதுவும் உடைக்கப்படாமல்அப்படியே கடலில் போடப்பட்டன.
பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் கூட ஏராளமான சிலைகள்பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications