ஜெவை நம்பினோர் கைவிடப்படுவதில்லை: விஜய்காந்த்
சென்னை:
திரையுலகினரின் கோரிக்கைகளை ஏற்று திருட்டு வீடியோ ஒழிப்புக்காக அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து,பிற கோரிக்கைகளை ஏற்றும் திரையலக நல்வாழ்வுக்கு உதவியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 23ம் தேதி தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக கோட்டைக்குச்சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து திருட்டு விசிடியை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறுகோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் மீதுகுண்டர் சட்டம் பாயும் என்று அறிவித்தார்.
மேலும் படப்பிடிப்புக் கட்டணம், சினிமா மீதான கேளிக்கை வரி ஆகியவற்றையும் அதிரடியாகக் குறைத்துதிரையுலகினரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்காந்த் அறிக்கை:
இந் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் சந்தித்தபோது, தன்னை நம்பினோரை கைவிடுவதில்லை என்ற மந்திரசொல்லைக் கூறினார். அந்த சொல்லுக்கு இவ்வளவு விரைவில் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்க்காததை செய்யும் முதல்வர் என்பதை ஜெயலலிதா உணர்த்திவிட்டார்.
திருட்டு விசியை ஒழிக்கவும், கேளிக்கை வரியை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து திரையுலகை நம்பி வாழும்பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்கள்:
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில், செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சித்ராலட்சுமணன்,
நாங்கள் எதிர்பார்த்ததை முதல்வர் செய்து கொடுத்துள்ளார். திரையுலகமே மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.முதல்வரை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளோம்.
இதற்காக திரையுலகின் அனைத்து சங்கங்களையும் சேர்ந்தவர்களும், பிரமாண்ட பேரணி நடத்தி முதல்வரைசந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். கிடைத்தவுடன் பேரணி நடத்தும் நாள்அறிவிக்கப்படும் என்றார்.
அப்போது நடிகர் சத்யராஜ், நடிகை ரேவதி, தயாரிப்பாளர்கள் ஏவிஎம். சரவணன், கே.ராஜன் ஆகியோரும்உடனிருந்தனர்.
கருணாநிதிக்கு சரத்குமார் பாராட்டு:
இதற்கிடையே நடிகர் சங்கத் துணைத் தலைவரான சரத்குமார் கூறுகையில்,
கண்ணம்மா படத்தின் துவக்க விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, விரைவில் சினிமாத்துறைக்கு நல்லகாலம் வரும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது நடந்துவிட்டது. இது சினிமாத்துறையினரின் ஒட்டுமொத்தமுயற்சிக்குக் கிடைத்த வாழ்த்து என்றார்.
முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்ற திரையுலகினர் குழுவில் சரத்குமார் இடம் பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினி, கமல் ஆகியோரும் போகவில்லை.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications