தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வெடித்த வெடிகுண்டு!
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கன்-பவுடர் எனப்படும் வெடிபொருள் கடத்தல் தொடர்பானவழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கன் பவுடர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற அறையில் இருந்த பல்வேறு பொருட்களுடன் இந்த கன் பவுடர் இருந்த பையும் வைக்கப்பட்டிருந்தது.
அந்த அறையில் பழைய பொருட்கள் அதிகம் சேர்ந்துவிட்டதால் அவற்றை எரித்துவிட நீதிமன்ற ஊழியர்கள்முடிவு செய்தனர்.
அறையில் இருந்த பழைய பொருட்கள், குப்பைகளை எடுத்து வந்த அவர்கள் அதில் கன் பவுடர் இருந்ததைக்கவனிக்கவில்லை. நீதிமன்ற வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் அவற்றைப் போட்டு தீ வைத்துள்ளனர்.
அப்போது கன் பவுடர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
இதில் நீதிமன்ற ஊழியர் ராமு என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் தஞ்சாவூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்களும், வழக்கறிஞர்கள்அலறியடித்தபடி ஓடினர். நீதிமன்றத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடந்துவிட்டதாக தகவல் பரவியதையடுத்துமாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோரும் அங்குவிரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியபோது தான் கன்-பவுடர் இருந்ததும் அது தீ வைக்கப்பட்டதால் வெடித்ததும்தெரியவந்தது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications