கல்பனாவிற்கு பெருமை சேர்த்த டெக்ஸஸ் பல்கலை
ஹூஸ்டன்:
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழகம் தனது வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் மாணவர்விடுதிக்கு மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டியுள்ளது.
இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸாவில் பணியாற்றியவர் கல்பனா சாவ்லா. கடந்தஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி, 16 நாட்கள் விண்வெளிப் பயணத்தை முடித்து விட்டு பூமி திரும்பியகொலம்பியா விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியது.
அந்த விபத்தில் பலியான 7 விண்வெளி வீரர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்த கல்பனா, விண்வெளி துறையில் முதுகலைப் பட்டத்தைடெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முடித்தார். இப்போது அவரது நினைவைப் போற்றும் விதமாக, டெக்ஸாஸ்பல்கலைக்கழம் தனது புதிய மாணவர் விடுதிக்கு கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டியுள்ளது.
400 மாணவர்கள் தங்கும் வகையில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதி தொடக்க விழாவில்கல்பனாவின் தந்தை பனாரசி லால் சாவ்லா, பல்கலைக் கழக வேந்தர் மார்க் யூடோப், பல்கலைக்கழக முதல்வர்ஜேம்ஸ் ஸ்பேனியோலோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications