மக்கள் தலையில் தியேட்டர் பராமரிப்பு செலவு!
சென்னை:
திரையரங்குப் பராமரிப்புக்காக பொதுமக்களிடமிருந்தே கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திரைத் துறையினருக்கு ஜெயலலிதா பல சலுகைகளைஅறிவித்துள்ளார். சமுதாயத்தில் உள்ள பல்வேறு துறையினருக்கும் சலுகைகள் வழங்குவதில் ஆச்சரியம் இல்லை.அதுபோலவே, திரைத் துறையினருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தவறில்லை.
அதேசமயம், இந்த சலுகைகள் அரசின் கஜானாவிலிருந்து கொடுக்கப்படுவதாக அமைந்திருக்க வேண்டும். அதைவிடுத்து பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் சலுகைகளை வழங்கக் கூடாது.
திரையரங்கு பராமரிப்புக்கு ஆகும் செலவை படம் பார்க்க வரும் பொதுமக்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்என்று முதல்வர் அறிவித்திருப்பது இயற்கை நியதிக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
இனிமேல் படம் பார்க்க வரும் பொதுமக்கள் ஏ.சி. திரையங்குக்கு போவதானால் ரூ. 1ம், சாதாரண தியேட்டருக்குபோவதானால் 50 பைசாவும் கூடுதலாக செலுத்த வேண்டியது வரும்.
திரையரங்க உரிமையாளர்களுக்கு இது சலுகையாக இருக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு அபராதமாகவேஅமையும்.
பஸ் மற்றும் ரயில்களைப் பராமரிக்க ஆகும் செலவை, பயணிகளிடம் அரசு வசூலிப்பதில்லை. அதுபோலத்தான்திரையரங்குகளும். அவற்றைப் பராமரிக்க வேண்டியது திரையரங்கு உரிமையாளர்களின் கடமை. அப்படிஇருக்கையில் பொதுமக்களிடம் பராமரிப்பு செலவைக் கேட்பது நியாயமே இல்லை.
எனவே இந்த மக்கள் விரோத அறிவிப்பைக் கைவிட்டு விட்டு திரையரங்குகளுக்கு வேறு வகைகளில் சலுகைவழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சினிமாத்துறையினரை அசுர வேகத்தில் சந்தித்து, அசுர வேகத்தில் சலுகைகளை அறிவித்த முதல்வர்ஜெயலலிதாவை சந்திக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் பல மாதங்களாக தேதி கேட்டு காத்துக்கொண்டுள்ளனர். அவர்களையும் சந்திக்க முதல்வர் முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
கட்டணத்தை குறைக்க மறுப்பு:
இதற்கிடையே, தமிழக அரசு பல சலுகைகளை வழங்கியுள்ள போதிலும், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம்குறைக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அபிராமிராமநாதன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழக அரசு கேளிக்கை வரியைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால்திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும் என்று பேச்சு எழுந்துள்ளது. இது தவறான தகவல்.
கேளிக்கை வரியைக் குறைத்தால் டிக்கெட் கட்டணம் குறையும் என்று கூற முடியாது. டிக்கெட் கட்டணத்தைக்குறைத்தால் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் பலன் தராமல் போய் விடும். எனவே டிக்கெட்கட்டணத்தைக் குறைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் அவர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications