மகனுக்கு இளைஞர் காங். பதவி: ப. சிதம்பரம் முயற்சி
சென்னை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப்போட்டியிடுகிறார்.
பிசினஸ் செய்து வரும் கார்த்திக்கை தனது அரசியல் வாரிசாகவும் உருவாக்கி வருகிறார் சிதம்பரம். அவரதுசிவகங்கை தொகுதியிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வரும் கார்த்திக், இப்போது மாநில அளவிலானமுக்கிய பொறுப்பைப் பிடிக்க முயன்று வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, கார்த்திக்கை மாநில இளைஞர்காங்கிரஸ் தலைவராக்க சிதம்பரம் முயற்சி செய்து வருகிறார். இப்போது இந்தப் பொறுப்பில் விஷ்ணு பிரசாத்இருந்து வருகிறார்.
தேசிய அளவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்டு வருவதால், தமிழகத்திலும் விஷ்ணு பிரசாதைத்தூக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பதவியைப் பிடிக்க கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை தொகுதியை சிதம்பரத்துக்கு விட்டுத் தந்த சுதர்சனநாச்சியப்பனின் மகன் ஜெயசிம்மன், முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகன் அருள், நவீன் மற்றும் தியாகுஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந் நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரின் ஆதரவுபெற்ற விஷ்ணு பிரசாத் எப்படியாவது தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல் காந்தி கட்சியில் வேகமாக முக்கிய இடத்தைப்பிடித்து வரும் நிலையில், தனது மகன் கார்த்திக்கையும், இந்த நேரத்தில் மாநில அளவில் முக்கியப் பதவிக்குக்கொண்டு வந்தால் அவரது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என சிதம்பரம் கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்.
இந்தப் பதவியின் மூலம் ராகுல் காந்தியுடன் கார்த்திக் நெருக்கமாக முடியும் என்பது சிதம்பரம் போடும் கணக்கு.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications