இந்தியா, ஆஸி. டெஸ்ட்: சோனி டிவி ஒளிபரப்பு
கொல்கத்தா:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளை சோனி டிவி ஒளிபரப்பு செய்கிறது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் மகேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்தத் தொடர் ஒளிபரப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே மேற்கொள்கிறது. வாரியம்ஆட்டங்களைத் தயாரித்து, வருவாய் பகிர்வின் அடிப்படையில் வினியோகம் செய்ய உள்ளது.
இதன்படி டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் போட்டிகளை படம் பிடிக்கும். சோனி நிறுவனம் அதை ஒளிபரப்பு மற்றும்மார்க்கெட்டிங் பணிகளை மேற்கொள்ளும். நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆட்டங்களை தூர்தர்ஷனிலும்ஒளிபரப்ப சோனி உதவும்.
இந்த டெஸ்ட் தொடர் மட்டுமல்லாது, நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்குஇடையிலான ஒரு தின போட்டி, நவம்பரில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுடனான 2 டெஸ்ட் தொடர்ஆகியவையும் சோனி மூலமே ஒளிபரப்பாகும் என்றார்.
இந் நிலையில், ஒளிபரப்பு உரிமை சோனி மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதைஎதிர்த்து, ஜீ டிவி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிறசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரிக்கி பாண்டிங் இல்லை:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் வரும் 6-ம் தேதிதொடங்குகிறது.
இந்தப் போட்டியிலும், அதற்கு அடுத்த போட்டியிலும் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் விளையாடமாட்டார்.
ஐசிசி சாம்பியன் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ரிக்கிபாண்டிங்கின் இடது கைபெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார்.
இதேபோல் டெண்டுல்கரும் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்றுஅறிவிக்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications