கம்யூ. எதிர்ப்பு: திட்ட கமிஷன் குழுக்கள் கலைப்பு
டெல்லி:
இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பால், வெளிநாட்டு நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்த 19ஆலோசனைக் குழுக்களை மத்திய திட்டக் கமிஷன் கலைத்துவிட்டது.
10வது ஐந்தாண்டுத் திட்ட இடைக்கால மதிப்பீட்டுக்காக ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தகுழுக்களில் வெளி நாட்டு நிதி ஆலோசனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றதற்கு கம்யூனிஸ்ட்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்கா, இங்கிலாந்தில் பிரதமருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த திட்டக்கமிஷன் துணைத் தலைவர்மாண்டேக்சிங் அலுவாலியா, ஆலோசனைக் குழுவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இடம் பெற்றிருப்பதில்தவறில்லை என்றார்.
இதைக் கண்டித்து திட்டக் குழுவிலிருந்து விலகுவதாக கம்யூனிஸ்ட் சார்புடைய பொருளாதார நிபுணர்கள்அறிவித்தனர்.
உலக வங்கி, மெக்கின்சே, ஆசிய வளர்ச்சி வங்கி, பர்ஸ்ட் பாஸ்டன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 நிபுணர்களைஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்தும்இடதுசாரிகள் வற்புறுத்தினர்.
இதையடுத்து இக் குழுக்களில் இருந்து விலக வெளிநாட்டு ஆலோசகர்கள் முன் வந்தனர். இதையடுத்து இக்குழுக்களை கலைக்க திட்டக் கமிஷன் முடிவு செய்துள்ளது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications