ஜெயலட்சுமி--- சிபிஐ விசாரணை: இன்று தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை & மதுரை:

Jayalakshmi ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரிக்குமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்புவழங்கவுள்ளது.

தமிழக காவல்துறை அதிகாரிகள் பலரும் தன்னுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளா. இந்தப் புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காவல்துறை தென் மண்டல ஐ.ஜி ராஜேந்திரன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை முன்பு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பாலசுப்ரமணியம், மாசிலாமணி ஆகியோர்அடங்கிய பெஞ்ச் சென்னையில் விசாரித்து வந்தது.

இந்த விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் தீர்ப்புவெளியாகும் என்று தெரிகிறது.

வக்கீலை மிரட்டிய அதிகாரி:

இதற்கிடையே ஜெயலட்சுமியின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை ஜீப்பை ஏற்றிக் கொலை செய்வேன் எனஉதவி போலீஸ் கமிஷ்னர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டிக்கு இந்த வழக்கறிஞர்கள் தந்தி மூலம் அவசர புகார் அனுப்பியுள்ளனர்.

ஜெயலட்சுமிக்கு ஆதரவாக அழகர்சாமி, ஓம்சேர்ம பிரபு மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர்.இதில் அழகர்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

நானும் பிரபுவும் கோரிப்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இன்ஸ்பெக்டர்அசோக்குமாரூம், ரோகிணி பாத்திமா என்ற பெண் போலீஸ் அதிகாரியும் தடுத்து நிறுத்தினர். ஆர்.சி புக்,லைசென்ஸ் எடு என்றனர். அவர்கள் கேட்டதை எல்லாம் எடுத்துக் காட்டினேன்.

அப்போது அங்கு வந்த உதவி போலீஸ் கமிஷ்னர் பஷீர் அகமத், ஓரமா நில்லு என்று ஒருமையில் கூறினார்.அப்போது, நீங்கள் கேட்ட ஆதரத்தையெல்லாம் காட்டிவிட்டோம். இன்னும் ஏன் நிற்கச் சொல்கிறீர்கள் என்றுகேட்டேன்.

இதற்கு பஷீர் அகமத், போலீசார் குறித்து இல்லாததையும் பொல்லாததையும் கோர்ட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்.இப்போது நீ என் கட்டுப்பாட்டில் இருக்கிறாய். இங்கு வைத்து உன்னை என்னால், என்ன வேண்டுமானாலும்செய்ய முடியும். பைக்கில் போகவிட்டு பின்னால் வந்து ஜீப்பை ஏற்றிக் கொன்றுவிடுவேன். ஜாக்கிரதை என்றார்.

ஒரு போலீஸ் அதிகாரி நடு ரோட்டில் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து நானும்பதிலுக்குப் பேச, வாக்குவாதம் ஏற்பட்டு பொது மக்கள் கூடிவிட்டனர். மக்கள் கூடிவிட்டதைப் பார்த்து என்னைப்போகுமாறு கூறி விடுவித்தார் பஷீர் அகமத்.

உதவி கமிஷ்னரே இப்படி நடந்து கொண்டதால் அவர் மீது போலீசில் புகார் கொடுத்து பலனில்லை. இதனால்தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு அவசரமாக தந்து அனுப்பியுள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+