கருணாநிதியுடன் பிரச்சனை இல்லை: வைகோ
டெல்லி & சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியுடன் தனக்கு கருத்து வேறுபாடோ, மோதலோ இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
கருணாநிதிக்கும் எனக்கும் உறவு நன்றாகவே உள்ளது. அவருடன் கருத்து வேறுபாடோ மோதலோ இல்லை.கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. அந்தகூட்டணியில் இருந்து மதிமுக விலகும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எங்கள் கூட்டணியின் தலைவர்கருணாநிதிதான். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம்.
அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் சில இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதை வைத்துஅதிமுக பலம் அடைந்து வருவதாக கூற முடியாது. இந்த சிறு வெற்றியை பொருட்படுத்த தேவை இல்லை.ஏனெனில் இந்த வெற்றிக்காக ஆளும்கட்சி பல முறைகேடான வழிகளை கையாண்டது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மதிமுக சேராது. அது குறித்து நாங்கள்சிந்திக்கவே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் போலவே நாங்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியில்இருந்து ஆதரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
வைகோவுக்கு நட்வர்சிங் கடிதம்
இந் நிலையில், மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை மீட்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் கடிதம்எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜன், கமல் என்ற இரு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மன்மோகன்சிங், நட்வர்சிங் ஆகியோருக்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன்சிங் வைகோவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அக் கடிதத்தில்,இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நட்வர் சிங்கை கேட்டுக் கொண்டிருப்பதாகத்தெரிவித்திருந்தார். இந் நிலையில் தற்போது நட்வர்சிங் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் இளைஞர்களையும் மீட்பதற்கானநடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications