வாசன் Vs
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் ஆதரவாளர்களுக்கும், மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும்இடையே கோஷ்டிப் பூசல் மீண்டும் வெடித்துள்ளது.
அண்மையில் மதுரை நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சல்மான் குர்ஷித்முன்னிலையில் வாசன் ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளர்களும் அடித்து உருண்டனர்.
இதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்கள் வின்சென்ட், அன்னபூர்ணா தங்கராஜ் ஆகியோரை கட்சியில்இருந்து நீக்குவதாக வாசன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைசுமத்தி இளங்கோவன் ஆதரவாளர்கள் 32 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். வாசன் தலைமையை மாற்றவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இதனையடுத்து மீது கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 32 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் அகில இந்தியதலைமைக்கு வாசன் சிபாரிசு செய்தார். நேரில் சென்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து 10 மாவட்ட தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும்பொன்.கிருஷ்ணமூர்த்தி என்பவரை கட்சியில் இருந்து வாசன் சஸ்பெண்ட் செய்தார்.
இதனால் ஆத்திரமுற்ற இளங்கோவன் ஆதரவாளர்கள் சென்னையில் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இந்தகூட்டத்தில் 10 மாவட்ட தலைவர்களும், தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார், கிள்ளிவளவன்,முன்னாள் எம்.எல்.ஏ. வேவல்துரை உள்ளிட்ட இளங்கோவன் ஆதரவாளர்ள் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், அகில இந்தியசெயலாளருமான கிருஷ்ணமூர்த்தி 10 மாவட்ட தலைவர்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.
அதில், தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நீங்கள் வெளியிட்ட அறிக்கை கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிரானது,இது தொடர்பாக நாளை மறுநாள் பாண்டிச்சேரியில் என்னை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்கூறியுள்ளார்.
நாளை மறுநாள் புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரைகிருஷ்ணமூர்த்தி 10 மாவட்ட தலைவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
இது குறித்து இளங்கோவன் ஆதரவாளர்கள் கூறுகையில், வாசன் மீது நாங்கள் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளைகிருஷ்ணமூர்த்தியிடம் நேரிலும் தெரிவிப்போம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வாசனிடமும் விளக்கம்கேட்க வற்புறுத்துவோம் என்றனர்.
இளங்கோவன் பேட்டி:
இந் நிலையில், சென்னையில் நடந்த இந்தியா, இலங்கை வர்த்தக கூட்டுக் குழு கூட்டத்தில் இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டவரான சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கூறியிருக்கிறார்.முன்பு நான் பேட்டி அளித்தபோது, வேதாளம் முருங்கை மரத்தில் இருந்து கீழே இறங்கியிருக்கிறது என்றேன்.தற்போது அவரது பேட்டி மூலம் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.
சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கை வர்த்தகம் பாதிக்காது என்றார். முன்னதாக டெல்லியிலிருந்து சென்னைவரும்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதா ஒரே நாளில் 3 ஆண்டு சினிமா விருதுகளை அறிவித்து இருக்கிறார். அவர் சினிமாவிலிருந்துவந்தவர். அதனால் சினிமாக்காரர்களுக்கு மொத்தமாக விருது வழங்கியிருக்கிறார்.
கிருஷ்ணா நீருக்காக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை மட்டும் ஜெயலலிதா சந்தித்தால் போதாது. அதேபோல்கர்நாடகத்திற்குப் போய் அம் மாநில முதல்வரை சந்தித்து காவிரி நீரை கேட்டுப் பெற வேண்டும் என்று கூறினார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications