இந்திக்கு எதிரியல்ல திமுக: கருணாநிதி
சென்னை:
திமுக எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, மொழித் திணிப்பை மட்டுமே எதிர்க்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் ராஜஸ்தான் வாலிபர் சங்கத்தின் 11வது ஆண்டு விழாவில் பேசிய கருணாநிதி,
திமுக இந்தி மொழிக்கோ அல்லது வேறு எந்த மொழிக்கோ எதிரானது அல்ல. ஆனால், அதைத் திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம்.
இப்போது மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் இந்தியில் பேசும் அமைச்சர்களின் பேச்சு உடனடியாக ஆங்கிலத்திலும் மொழியாக்கம்செய்யப்படுவதாக அமைச்சர் தயாநிதி மாறன் என்னிடம் தெரிவித்தார். இந்தி தெரியாத அமைச்சர்களுக்கு இது நிச்சயம் பேருதவியாகஇருக்கும்.
இதுவரை கேபினட் கூட்டத்திலேயே என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் திண்டாட வேண்டிய நிலையில் தான் இந்தி தெரியாதஅமைச்சர்கள் இருந்தார்கள். மத்திய அரசின் இந்த மொழியாக்க முயற்சியை பாராட்டுகிறேன்.
தமிழ் இப்போது செம்மொழியாகி உள்ளது. இது மட்டும் போதாது. மத்தியில் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட வேண்டும். அப்படியேஅரசியல் சட்டத்தின் எட்டாவது சரத்தில் உள்ள அனைத்து மொழிகளையும் தேசிய அளவில் ஆட்சி மொழியாகவும் ஆக்கிட வேண்டும்என்றும் மத்திய அரசை வற்புறுத்துகிறேன்.
மத்திய அரசு நிகழ்ச்சிகளில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே இப்போது ஆட்சி மொழியாக உள்ள நிலை மாறி, அவரவர் தாய் மொழியில்நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும், நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது. இதையும் மத்திய அரசிடம் கோரிக்கையாகவைத்துள்ளோம். விரைவில் இதுவும் நடக்கும்.
ஆண்டுதோறும் 11 லட்சம் குடும்பங்களுக்கு ராஜஸ்தானிய இளைஞர் சங்கத்தின் மூலமாக இலவச உணவு வருகிறீர்கள். ராஜஸ்தானியவாலிபர்களின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன். திமுக அறக்கட்டளையின் சார்பில் ரூ. 22,000த்தையும் இந்தத் திட்டத்துக்காகவழங்குகிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், இந்த வாலிபர் சங்கத்தின் இணையத் தளத்தை தயாநிதி மாறன் துவக்கி வைத்தார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications