ஊழல் வழக்கு: தனி நீதிமன்ற பதவி காலம் நீட்டிப்பு
சென்னை:
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கூறப்பட்ட ஊழல் புகார்களைவிசாரிக்க நியமிக்கப்பட்ட தனி நீதிமன்றத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அந்தநீதிமன்றங்களில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது 46 வழக்குகள் தொடரப்பட்டன.
அவற்றில் 28 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டன. சில வழக்குகளில் விசாரணையில் ஏற்பட்டதாமதம், தனி நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றது ஆகிய காரணங்களால் வழக்குகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டது.அதனால் அவ்வப்போது தனி நீதிமன்றங்களின் பதவி காலம் நீடிக்கப்பட்டது.
இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், 2 தனி நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டன. ஒரே ஒரு நீதிமன்றம் மட்டும்சென்னை சிங்காரவேலர் மாளிகையில் இயங்கி வருகிறது.
தற்போது தனி நீதிமன்ற நீதிபதியாக மதிவாணன் இருக்கிறார். இந்த நீதிமன்றத்தில் 3 ஊழல் வழக்குகள் நிலுவையில்உள்ளன. முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், தன் மீதான ரூ.3.72 கோடி சொத்து வழக்கில் இருந்து தன்னைவிடுதலை செய்யக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. தேனி பன்னீர்செல்வம், தன் மீதான ரூ.21.36 கோடி சொத்து வழக்கில்குற்றப்பத்திரிக்கையில் சில ஆவணங்களை தனக்கு தமிழில் வழங்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்.இந்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால் தனி நீதிமன்றத்தின் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில் உயர்நீதிமன்றத்தின் சிபாரிசை ஏற்று மேலும் 3 மாதத்துக்கு தமிழக அரசு தனி நீதிமன்றத்தின் பதவி காலத்தை செப்டம்பர்30ம் தேதி வரை நீட்டித்தது.
இப்போது மேலும் 6 மாதத்துக்கு, அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தனி நீதிமன்றத்தின் பதவிகாலத்தை தமிழக அரசு நீடித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications