தமிழ் செம்மொழி: கருணாநிதிக்கு பாராட்டு விழா
சென்னை:
செம்மொழி கோரிக்கையை நிறைவேற்றித் தந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் வரும் 17-ம் தேதிபாராட்டு விழா நடைபெறுகிறது.
குன்றக்குடி அடிகளாரைத் தலைவராகவும், கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணனைத் துணைத் தலைவராகவும், கவிஞர்வைரமுத்துவை செயலாளராகவும் கொண்ட பாராட்டு விழாக் குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் இவ்விழாவில், திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
கவிஞர் அப்துல் ரகுமான், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன்,
தமிழறிஞர்கள் சுப்பிரமணியம், மணவை முஸ்தபா, ஒளவை நடராஜன், திருப்பனந்தாள் மடாதிபதிமுத்துக்குமாரசாமித் தம்பிரான், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.
சுடு மொழியால் வந்த சூறாவளி: கருணாநிதி
இதற்கிடையே, பேராசிரியர் நன்னனின் பேத்தி திருமணம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுகருணாநிதி பேசியதாவது:
பேராசிரியர் நன்னன் தொடக்கத்தில் தேசியவாதியாக இருந்தாலும், இன்றைக்கு தமிழ்ப் போராளியாக தன்னைஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் விடாப்பிடியாக பெரியார், அண்ணாவின் கொள்கைகளைபறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.
சுயமரியாதை இயக்கம் ஏன் பிறந்தது என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. வர்ணாஸ்ரம தர்மப்படிநாமெல்லாம் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதிலேநான்காவது பிரிவிலே சேர்க்கப்பட்டோம்.
இதனால் அடிமைகளாக்கப்பட்டு சூத்திரர்கள் என்ற சுடுமொழி நம்மைத் தாக்கி, அதன் காரணமாக எழுந்தசூறாவளிதான் சுயமரியாதை இயக்கம் என்றார் கருணாநிதி.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications