திருப்பூர் குமரன் தபால் தலை வெளியீடு
சென்னை:
சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன் நினைவு தபால் தலை, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்றுவெளியிடப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் நினைவுப் பூங்காவில், குமரன் நூற்றாண்டு விழாக்குழுசார்பாக அதன் தலைவர் வேலப்பன் குமரன் தபால் தலையை வெளியிட, ஓய்வு பெற்ற உதவி தபால்துறை அதிகாரிகதிர்வேலு அதை பெற்றுக்கொண்டார். இந்த தபால் தலை ஒன்றின் விலை 5 ரூபாய்.
அதே போல் தபால் உறையினை குமரன் நூற்றாண்டு விழாக்குழுவின் பொருளாளர் சேர்மன் கந்தசாமி வெளியிடமுன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அதைப் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயே சிப்பாய்கள் சூழந்துக் கொண்டு தடியால் தாக்கிய போதும்கரங்களில் பிடித்திருந்த தேசிய கொடியை காத்து, கொடி காத்த குமரன் என்று சரித்திரத்தில் நீங்காத இடம்பெற்றவர் திருப்பூர் குமரன்.
அவரது தியாகத்தை போற்றும் வகையில் குமரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசுஏற்று கொண்டது.
தமிழக அரசின் சார்பில் அவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். விழா நடக்கும் நாள் மற்றும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications