ஹஜ்: மெக்காவில் ஆற்காடு விருந்தினர் இல்லம் !
சென்னை:
தமிழக ஹஜ் பயணிகளின் வசதிக்காக மெக்காவில் புதிய விருந்தினர் இல்லம் திறக்கப்பட்டுள்ளதாக ஆற்காடுஇளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் ஆற்காடு வக்ப் அமைப்பின் சார்பில் விருந்தினர் இல்லம்திறக்கப்பட்டள்ளது. இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் இங்கு தங்கலாம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 25 சவுதிரியால் கட்டணமாக வசூலிக்கப்படும்.
காபாவிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலேயே வக்ப் விருந்தினர் இல்லம் உள்ளதால் தமிழகயாத்ரீகர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
அக்டோபர் 15ம் தேதி புனித ரமதான் மாதம் தொடங்குகிறது. எனவே, ஹஜ் யாத்திரை செல்வோர், மெக்காவில்உள்ள ஆற்காடு வக்ப் விருந்தினர் இல்லத்தில் தங்க விரும்பினால்,
அமீர் மஹால், ராயப்பேட்டை, சென்னை-14, தொலைபேசி எண்: 28485861, 28485863 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications