ரூ. 4,192 கோடியில் நெய்வேலி சுரங்கம் விரிவாக்கம்
நெய்வேலி:
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 4,192.06 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இங்குள்ள 2வது நிலக்கரி சுரங்கத்தின் மின் உற்பத்தித் திறன் 1,970 மெகா வாட்டாகஅதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக 150 லட்சம் டன் நிலக்கரி தோண்டி எடுக்கப்படவுள்ளது. இந்த விரிவாக்கப்பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது நெய்வேலியில் 3 மாபெரும் திறந்த வெளி சுரங்கங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு 240 லட்சம் நிலக்கரிவெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள 3 மின் நிலையங்களும் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்கின்றன.
இந் நிலையில் 2வது சுரங்கத்தை விரிவாக்கி, மின் உற்பத்தியைப் பெருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக16.5 சதுர கி.மீ. பரப்பில் 150 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படவுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் 22 கோடிடன் அளவுக்கு பழுப்பு நிலக்கரி வளம் உள்ளதாகத் தெரிகிறது.
இந்த விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 2,161.28 கோடி செலவிடப்படவுள்ளது.
இங்கு வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை வைத்து தலா 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 மின்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக ரூ. 2,030.78 கோடி செலவிடப்படும்.
இதன்மூலம் நெய்வேலி மின் நிலையத்தின் 2வது பிரிவின் உற்பத்தித் திறன் 1,970 மெகா வாட்டாக உயரும்(நெய்வேலியின் மொத்த மின் உற்பத்தி 2,990 மெகாவாட்டாக உயரும்). இஙகு தயாராகும் மின்சாரம் தமிழகம்,கேரளா, கர்நாடகம், பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
இத் திட்டத்துக்குத் தேவைப்படும் மொத்த நிதியான ரூ. 4,192.06 கோடியில் 30 சதவீதத்தை நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம் வழங்கும். மீதித் தொகை கடன் மூலம் திரட்டப்படும் என என்.எல்.சி. வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications