அதிரடிப்படையில் சேரும் பழங்குடி வாலிபர்கள்
ஈரோடு:
காவல்துறையில் சேர்ந்துள்ள 32 பழங்குடி இன வாலிபர்களை, வீரப்பனைத் தேடும் அதிரடிப் படை தங்களதுபடையில் சேர்த்துக் கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு அதிரடிப்படை கோரிக்கை விடுத்துள்ளது.
வீரப்பன் காட்டுப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த 32 வாலிபர்கள் காவல்துறையில்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை வீரர்கள்,பயிற்சி கொடுத்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக இந்த பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது.
தற்போது 32 பேரும் பணியில் சேர தயாராக உள்ளனர். அவர்களுக்கு வேறு இடங்களில் பணி கொடுக்கப்படஉள்ளது.
இதையடுத்து அவர்கள் அதிரடிப் படையிலேயே சேர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்குஅதிரடிப்படை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதிரடிப்படை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் கூறுகையில், 32 வாலிபர்களையும்அதிரடிப்படையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான அனுமதி கிடைத்துவிடும்.
இதுதவிர ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 146பழங்குடி இன பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துள்ளோம்.அவர்களையும் அதிரடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications