கலிபோர்னியா: கோவில் கட்ட எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சிலிக்கன் வேலி:
கலிபோர்னியாவின் தென் பகுதியான சினோ ஹில்சில் மிகப் பெரிய இந்துக் கோவில் கட்டும் திட்டத்துக்கு அப்பகுதியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
போச்சாசன்வஸி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பு இங்கு கோவில் கட்ட முயன்றுவருகிறது.
ஆனால், இந்தக் கோவில் கட்டுமானத்துக்கு எதிராக அப் பகுதியினர் போராட்டம் நடத்தியதையடுத்து, கோவிலின்உயரம் நகரின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி சினோ ஹில்ஸ் சிட்டி கவுன்சில் அனுமதிமறுத்துள்ளது.
கோவில் கட்டப்பட்டால் சினோ ஹில்ஸ் பகுதியில் போக்குவரத்து அதிகமாகும், இதனால் இப் பகுதியில் அமைதிகெடும், மேலும் இப் பகுதிக்கு மத அடையாளமும் பூசப்படும் என்று கூறி கோவில் கட்டுவதை இப் பகுதியினர்எதிர்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications