புலிகள் பெயரால் மிரட்டும் இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

20 ராமேஸ்வரம் மீனவர்களைக் கடத்திய இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள்தாக்கத் திட்டமிட்டுள்ளதாக ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.

கடற்படையின் இந்த திசை திருப்பல் கடிதத்துக்கு இலங்கை மலையக மக்கள் முன்னணித் தலைவரும் அந் நாட்டுஎம்.பியுமான சந்திரசேகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 20 மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடிதம் தந்த கடற்படை:

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படைவீரர்கள் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய படகுகளை பறிமுதல் செய்தனர். இதைக் கண்ட மற்ற மீனவர்கள்படகுகளைத் திருப்பிக் கொண்டு தப்பினர்.

இதில் ஒரு படகை வழிமறித்த இலங்கைக் கடற்படையினர், அவர்களிடம் ஒரு கடிதத்தைத் தந்தனர். அதில்,இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளுக்கு தீ வைக்க விடுதலைப் புலிகள்திட்டமிட்டுள்ளனர் என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தில் தந்துவிடுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளனர் இலங்கைகடற்படையினர்.

தங்களிடம் பிடிபட்ட மீனவர்களை போலீசார் உதவியுடன் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்கடற்படையினர். அவர்களில் 5 பேரை சிறையில் அடைக்கவும், மற்ற 15 பேரை விடுவித்தும் மன்னார் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் கடத்தப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர்மன்மோகன் சிங்கிற்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கிற்கும் முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.

ஜெயலலிதா கடிதம்:

அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை உடனேமேற்கொள்ள வேண்டும்.

தப்பி வந்த சில ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை வீரர்கள் கையால் எழுதப்பட்ட ஒரு தாளைக்கொடுத்துள்ளனர். அதில், மீண்டும் இலங்கைக் கடல் பகுதிக்குள் வர வேண்டாம். இப்பக்கமாக வரும் மீனவர்களைசுட்டு வீழ்த்த விடுதலைப் புலிகள் காத்துக் கொண்டுள்ளனர் என்று எழுதப்பட்டிருந்ததாக தமிழக உளவுத்துறையினர் எனக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இலங்கை வீரர்கள் அடிக்கடி தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதும், சுட்டு வீழ்த்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், விடுதலைப் புலிகளும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்திருப்பதுஅதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதேபோல மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக தலைவர் கருணாநிதியும் நட்வர் சிங்குக்குக்கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை எம்.பி. கண்டனம்:

இந் நிலையில் இலங்கை தமிழ் எம்.பியான சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் தமிழகமீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர் அந்தக் கடிதத்தை தந்துள்ளனர். இது இலங்கை அரசும், ராணுவமும்இணைந்து செய்யும் சதி.

உலக அரங்கில் தன்னை சமாதான விரும்பியாகக் காட்டிக் கொள்ளும் இலங்கை அரசு, புலிகளைபலவீனப்படுத்துவதை வேலையாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு அங்கம் தான் அந்தக் கடிதம் என்றுகூறியுள்ளார்.

மீனவர்கள் வேலை நிறுத்தம்:

இதற்கிடையே மீனவர்கள் கடத்தப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்றவேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாளை முதல் உண்ணாவிரதம், தர்ணா, சாலை மறியல் என தொடர் போராட்டங்களை நடத்தவும் முடிவுசெய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+