தளவாய் பி.ஏ, 20 போலீசார் மீது சிபிஐ வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jayalakshmi ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் உதவியாளர் மற்றும் 20 காவல்துறைஅதிகாரிகள், போலீஸ்காரர்கள் மீது சிபிஐ இன்று வழக்குப் பதிவு செய்தது.

ஜெயலட்சுமி அளிக்க வாக்குமூலத்தையே புகாராக வைத்து வழக்குப் பதிவு செய்யுமாறு சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐ பதிவுசெய்துள்ளது.

சிபிஐ வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளோர் விவரம்:

1. அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பி.ஏ. காஜா மொய்தீன்

2. திருச்சி எஸ்பி சொக்கலிங்கம்- ஜெயலட்சுமியுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தார்

3. திருச்சி ஏ.டி.எஸ்.பி. ராஜசேகர்- ஜெயலட்மியை திருமணம் செய்து கைவிட்டார். செக்ஸ் தொல்லை கொடுத்தார்

4. மதுரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி- செக்ஸ் வெறிக்காக ஜெயலட்சுமிக்கு தாலி கட்டி கைவிட்டவர்

5. மதுரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்- ஜெயலட்சுமியுடன் செக்ஸ் உறவுக்கு துடித்தவர். அதற்காக திருமணம் செய்யுமாறுவற்புறுத்தியவர்

6. மதுரை இன்ஸ்பெக்டர் வானமாமலை- ஜெயலட்சுமியுடன் அருவருப்பான வகையில் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தவர். ரூ. 30,000பறித்துக் கொண்டு ஒதுங்கியவர்

7. திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்- செக்ஸ் தொடர்பு

8. மதுரை புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புராம்

9. மதுரை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து

10. பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு- துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஜெயலட்சுமியுடன் செக்ஸ் உறவு கொண்டவர்ய

11. கரூர் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன்

Jayalakshmi12. பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ்

13. பொள்ளாச்சி சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி

14. நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான்- தளவாய் சுந்தரத்தின் உதவியாளரான காஜா மைதீனின் மைத்துனர்.ஜெயலட்சுமியை மும்பை விபச்சார விடுதியில் விற்க பேரம் பேசியவர்

15. மதுரை திடீர்நகர் காவல் நிலைய ஏட்டு கண்ணன்-ஜெயலட்சுமிக்கு பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர் இளங்கோவனால்அனுப்பப்பட்டவர். இவரும் பின்னர் ஜெயலட்சுமியை அனுபவிக்க ஆரம்பித்தார்.

16. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் காசி- ஜெயலட்சுமிக்கு போலீஸ் காரை ஓட்டியவர்

17. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் சான்பாய்- ஜெயலட்சுமிக்கு எடுபிடி வேலை பார்த்தவர்

18. திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ்- போலீஸ் நிலையத்தில் வைத்தே ஜெயலட்சுமியை கற்பழித்தவர்

19. சமயநல்லூர் டி.எஸ்.பி. கனகராஜ்- ஜெயலட்சுமியுடன் வியாபார தொடர்பு வைத்திருந்தவர்

20. சாமியப்பன் (இன்ஸ்பெக்டர் இளங்ககோவனின் ரைட்டர்)

21. மதுரை திடீர்நகர் காவல் நிலைய ஏட்டு கல்யாணி- ஜெயலட்சுமிக்கு துணி துவைத்து போட்டவர்

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, ஜெயலட்சுமி மானபங்கப்படுத்தப்பட்டது, போலீசாரால்கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு பாலியல்ரீதியில் பயன்படுத்தப்பட்டது, அவரையும் அவரது குடும்பத்தினரையும்போலீசார் கடத்தியது ஆகிய விஷயங்கள் குறித்து விசாரிக்கவுள்ளது.

அத்தோடு ஜெயலட்சுமியின் தவறுகளையும் விசாரிக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+