தயாநிதி இன்று அமெரிக்கா பயணம்
டெல்லி:
மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் அரசு முறைப்பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்காவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், முக்கிய தொழில் அதிபர்களைச் சந்தித்து,இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
மேலும் இந்திய முதலீட்டு அமைப்பின் சார்பில் நியூயார்க்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு,இந்தியாவில் முதலீடு செய்வதற்கான கோரிக்கைளையும் ஆலோசனைகளையும் தயாநிதி மாறன் வழங்குவார்.
அமெரிக்காவில் சிதம்பரம்:
பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் இப்போது அமெரிக்கப் பயணத்தில் உள்ளார்.அமெரிக்க நிதியமைச்சர் ஜான் ஸ்னோவுடனும் பல்வேறு அமெரிக்க நிறுவன அதிபர்களுடனும் பேச்சு நடத்திவரும் சிதம்பரம், இந்தியாவில் அந் நாட்டு முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications