இது தான் கோயம்புத்தூர் போலீஸ் !
கோயம்புத்தூர்:
கோவையில் டிஎஸ்பி ரத்னகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஏராளமானநகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பிசினல் சொல்யூசன், புளூ சொல்யூசன் என்ற கம்யூட்டர் நிறுவனங்கள்கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகப் புகார்கள் வந்தன. அது குறித்து சேலம் அப்போது மாநகரக் காவல் துறைஉதவி ஆணையராக இருந்த ரத்னகுமார் விசாரணை நடத்தினார்.
அந்த வழக்கில் ரத்னகுமார் பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு மோசடி கும்பலை தப்பவிட்டார்.
தற்போது ரத்னகுமார் கோவையில் சிறப்பு புலனாய்வுத் துறை டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார். அவருக்குநெருக்கமானவராகக் கூறப்படும் பிரபாகரன் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில், கோவையில் வ.உ.சி. நகரில் உள்ள ரத்னகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்சோதனை நடத்தினர். அப்போது 19 பவுன் நகை, ரூ.22,000 ரொக்கப்பணம் மற்றும் சொத்து தொடர்பானஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல், சேலத்தில் பிரபாகரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனையில் வருமானத்துக்குஅதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக 30 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சேலம் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக லஞ்ச ஒழிப்புபோலீஸார் கூறினர்.
விபச்சாரியுடன் கும்மாளம் போட்ட போலீஸ்:
இந் நிலையில் கோவையில், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை ஜாமீனில் எடுத்து குஜாலாகஇருந்த இரண்டு போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார், ஆரோக்கிய தனசீலன் ஆகியோர்விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமலதா என்ற ஆந்திரப் பெண்ணை பினாமி நபர் ஒருவர் மூலம்ஜாமீனில் எடுத்தனர்.
பின்னர் அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
இது குறித்து கோவை போலீஸ் கமிஷ்னருக்கு புகார் வரவே, அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணைமுடிவில் இருவர் மீதான புகார் உண்மையென உறுதியாகவே, செந்தில்குமார், தனசீலன் ஆகிய இருவரையும் சைடுவருமானம் ஏதும் இல்லாத ஆயதப் படைக்கு மாற்றி கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications