தமிழக பொருளாதார வளர்ச்சி: உலக வங்கி பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.
உலக வங்கியின் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த அந்த வங்கியின் தென் கிழக்குமண்டலத்துக்கான தலைமை பொருளாளர் தேவராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்தியாவின் சராசரியை விட அதிகமாகவே உள்ளது. மனிதவளமேம்பாடும் தமிழகத்தில் நன்றாகவே இருக்கிறது.
தமிழகத்திலிருந்து மருத்துவத்திற்காக கடன் உதவி கோரப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உலக வங்கி ஆலோசித்துவருகிறது என்றார்.
இந்தக் கருத்தரங்கில் மாநில நிதித்துறை செயலாளர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications