காணாமல் போன 5 மாணவர்கள் ஒரே நாளில் மீட்பு
சென்னை:
சென்னையில் வீட்டை விட்டு ஓடிப் போன 5 மாணவர்களை போலீஸார் 8 மணி நேரத்திற்குள் மீட்டுபெற்றோரிடம் சேர்த்தனர்.
தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் ஆங்காங்கே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தாலும், சிலநேரங்களில் காவல்துறையினரின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றுத் தரதவறுவதில்லை.
சென்னையில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போன 5 சிறுவர்களை சென்னைபோலீஸார் 8 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைத்து பாராட்டுப்பெற்றுள்ளனர்.
மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், நாகராஜன், ராஜா உள்ளிட்ட 5 மாணவர்களும்சரியாக படிக்காததால் அவர்களை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த 5 பேரும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வரவில்லை. பள்ளிக்கூடம் முடிந்துவெகுநேரமாகியும் பிள்ளைகள் வீட்டுக்கு வராததால் பயந்து போன பெற்றோர்கள், மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
உடனடியாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சென்னைநகரில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. மாணவர்களின் பெற்றோர்கள், சகமாணவர்களிடம் நடத்திய விசாரணையின் எதிரொலியாக 5 பேரும் புதுவைக்குப் போயிருக்கலாம் எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் படை புதுவை விரைந்தது. புதுவையில் குறிப்பிட்ட இடத்தில் தேடியபோது, 5 பேரும் அங்குஇருந்தது தெரிய வந்தது. போலீஸாரைப் பார்த்ததும் அழுத அந்த மாணவர்கள், தங்களை வீட்டுக்கு அனுப்பினால்பெற்றோர் அடிப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு 5 பேரையும் அழைத்து வந்துபெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைத்தனர். பிள்ளைகளை அடிக்காமல் அறிவுரை கூறுமாறு பெற்றோர்களுக்குஅறிவுரை கூறவும் போலீஸார் தயங்கவில்லை.
காணாமல் போன 8 மணி நேரத்தில் தங்களது பிள்ளைகள் மீட்கப்பட்டது பெற்றோர்களுக்கு பெரும்சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுத்தது. போலீஸாருக்கு நன்றி கூறி பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications