ஹாக்கி: இந்தியா-பாக் போட்டி டிரா
சண்டிகர்:
ஹாக்கி தொடரின் ஆறாவது போட்டியில் இந்திய அணி 1-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை டிராசெய்தது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 8 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கி தொடர் நடந்து வருகிறது.முதல் கட்டமாக பாகிஸ்தானில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில்முன்னிலை பெற்றது.
இரண்டாம் கட்ட தொடரில் டெல்லியில் நடந்த ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் 3-1 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது. இந் நிலையில் ஆறாவது போட்டி சண்டிகரில் நடந்தது. இந்தப் போட்டியில் காயம் காரணமாகஇந்திய கேப்டன் திலீப் டர்க்கி பங்கேற்கவில்லை.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் கசன்பர் அலி கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்இக்னேஷ் டர்க்கி 33வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இப்போது பாகிஸ்தான் அணி தொடரில் 3-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அடுத்த இரண்டுபோட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
அடுத்த போட்டி வரும் நாளை அமிர்தசரஸில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
