400 விக்கெட்கள் வீழ்த்தி கும்ப்ளே சாதனை
பெங்களூர்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்இந்திய சுழல்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே.
பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில்கும்ப்ளே இந்த சாதனையைச் செய்தார். சைமன் காடிச் விதகெட்டை வீழ்த்தியது அவருக்கு 400- வது விக்கெட்டாகஅமைந்தது. இது அவரது 85வது டெஸ்ட் போட்டியாகும்.
இதுவரை 24 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கும்ப்ளே. கும்ப்ளே 400-வது விக்கெட்டைவீழ்த்தியபோது, கங்குலி உள்பட சக வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லியில் 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 74 ரன்களைக் கொடுத்து 10 விக்கெட்டுகளைக்கைப்பற்றி, ஜிம் லாகர்ஸ் செய்த சாதனையை கும்ப்ளே சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முதல் 10 வீரர்கள் பட்டியல்
1. முரளீதரன் (இலங்கை): 532 விக்கெட், 91 ஆட்டங்கள்.
2. வார்னே (ஆஸ்திரேலியா): -527 விக்கெட், 112 ஆட்டங்கள்.
3. வால்ஷ் (மேற்கிந்தியத் தீவுகள்): 519 விக்கெட், 132 ஆட்டங்கள்.
4. மெக்ராத் (ஆஸ்திரேலியா): -440 விக்கெட், 97 ஆட்டங்கள்.
5. கபில்தேவ் (இந்தியா): 434 விக்கெட், 131 ஆட்டங்கள்.
6. ஹாட்லி (நியூசிலாந்து): -431 விக்கெட், 86 ஆட்டங்கள்.
7. அக்ரம் -(பாகிஸ்தான்): 414 விக்கெட், 104 ஆட்டங்கள்.
8. அம்புரோஸ் (மேற்கிந்தியத் தீவுகள்): 405 விக்கெட், 98 ஆட்டங்கள்.
9. கும்ப்ளே (இந்தியா): 400 விக்கெட், 85 ஆட்டங்கள்.
10. போத்தம் -(இங்கிலாந்து): 383 விக்கெட், 102 ஆட்டங்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications