ஸ்டிரைக்: ஊழியர்களுடன் அரசு விரைவில் பேச்சு
சென்னை:
தீபாவளி போனஸ் விவகாரம் தொடர்பாக போக்குவரத்து, உணவு, மின்வாரியம் மற்றும் ஆவின் நிறுவனங்களின்ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சகட்டுமேனிக்கு டிஸ்மிஸ் செய்துகலவரப்படுத்தியது தமிழக அரசு. இதையடுத்து வந்த தேர்தல் தோல்விகளால் முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில்பெரும் மாற்றம் ஏற்பட்டது.
அரசு ஊழியர்களுடன் பேச்சே கிடையாது என்று தவிர்த்து வந்த அரசு இப்போது வேலை நிறுத்தம் செய்யப்போகும் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்திட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு மற்றும் அரசு சார்புத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச விகிதமான8.33 சதவீத போனஸ் தான் வழங்கப்பட்டு வருகிறது.
இதை 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரி வருகின்றன. இம்முறை 20 சதவீதபோனஸ் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் இவை எச்சரித்துள்ளன.
மேற்கண்ட துறைகள் தவிர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கூட்டுறவு வங்கிகள், சர்க்கரை ஆலைகள்ஆகியவற்றின் ஊழியர்களும் விரைவில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.
இந் நிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் பேச்சுக்களைத் தொடங்கியுள்ளனர்.
இதில் பிரச்சனை தீராவிட்டால் அடுத்த கட்டமாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பியதும் இந்த விஷயத்தில் முக்கிய முடிவுஎடுக்கப்படும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி இருப்பினும் ஊழியர் சங்கங்கள் கோரும் 20 சதவீத போனஸ் தொகை நிச்சயம் வழங்கப்பட மாட்டாதுஎன்று கூறப்படுகிறது. கூடுதல் போனஸ் கோரும் அனைத்துத் துறைகளும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகஅரசு கூறுகிறது.
இந் நிலையில் 20 சதவீத போனஸ் கிடைப்பது சந்தேகம்தான்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications