அத்வானியிடம் தெல்கியின் பணம்: வழக்கறிஞர் புகார்
டெல்லி:
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் டெல்ஜியின் ரூ.5,500 கோடி பணம், முன்னாள் துணைப்பிரதமர் அத்வானியிடம் இருப்பதாக டெல்ஜியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ.60,000 கோடி போலி முத்திரைத்தாள் மோசடியில் முதல் குற்றவாளியான தெல்கி பெங்களூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் அப்துல் ரகுமான் குடியரசுத் தலைவர் கலாம் மற்றும் உச்ச நீதிமன்றதலைமை நீதிபதிக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், தெல்கி சம்பாதித்த ரூ.5,500 கோடி பணத்தை அத்வானி பதுக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டைக்கூறியுள்ளார். இது தொடர்பாக அப்துல் ரகுமான் நிருபர்களிடம் கூறியதாவது:
தெல்கியின் வழக்கறிஞராக நான் நியமிக்கப்பட்ட பின்பு கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி பெங்களூர் மத்தியசிறைக்குச் சென்று தெல்கியை சந்தித்துப் பேசினேன்.
அதன் பின்னர் போலி முத்திரைத்தாள் மூலம் ரூ.60,0000 கோடிக்கு மேல் பணம் புரண்ட தகவலை வெளியிட்டேன்.இதையடுத்து அப்போதைய துணை பிரதமர் அத்வானியின் தூதர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு,
தெல்கி சம்பாதித்த பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளார் என்பதை கேட்டுச் சொல்லுங்கள், பணம் இருக்கும்இடத்தை சொன்னால் தெல்கி ஜாமீனில் வெளியே வர மத்திய அரசு உதவும் என்று என்னிடம் தெரிவித்தார்.
இதையடுத்து 10ம் தேதி மீண்டும் தெல்கியை சந்தித்தேன். அப்போது அரசு ஏற்பாட்டின் பேரில் நீண்ட நேரம் நான்அமர்ந்து பேச அனுமதிக்கப்பட்டேன். அப்போது தெல்கி என்னிடம் பல முக்கிய தகவல்களை சொன்னார்.
அந்த தகவல்களை தூதரிடம் சொல்வது நல்லதல்ல என்று கருதிய நான், அத்வானியை நேரில் சந்தித்துப் பேசஅனுமதி கேட்டேன். இதையடுத்து டிசம்பர் மாதத்திலேயே அத்வானியை 3 தடவை சந்தித்துப் பேசினேன்.
அத்வானியிடம் பல முக்கிய தகவல்களையும், தெல்கி கொடுத்த ஆவணங்களையும் ஒப்படைத்தேன். மராட்டியமாநிலத்தில் கோலபா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும், பிவாண்டியில் உள்ள ஒரு குடோனிலும்ரூ.5,500 கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவலையும் அவரிடம் தெரிவித்தேன்.
அந்த பணத்தை கைப்பற்றி அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அப்போதுஅத்வானி என்னிடம், நாட்டுக்கு செய்துள்ள சேவைக்காக உங்களுக்கு தகுந்த விருது கிடைக்க ஏற்பாடு செய்வேன்என்றார்.
அதன் பின்பு, டிசம்பர் 20ம் தேதி மத்திய உளவுத்துறை அதிகாரி ஹர்ஜித் சிங் என்பவர் என்னை செல்போனில்தொடர்பு கொண்டு, டெல்லி மான்சிங் சாலையில் உள்ள 7ம் எண் வீட்டிற்கு வருமாறு கூறினார். அங்கு நான்சென்றபோது, ஒருவர் என்னிடம் 3 மணி நேரம் பேசினார். அத்வானியிடம் தெரிவித்த தகவல்களை வேறு எங்கும்நான் வெளியிடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அத்வானியிடம் நான் கூறிய ரூ.5,500 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அந்த பணம் இதுவரைநாட்டின் கஜானாவுக்கும் வந்து சேரவில்லை. ரூ.5,500 கோடி பணம் பற்றிய தகவலை தன் உதவியாளரிடம் கூடசொல்லக்கூடாது என்று என்னிடம் அத்வானி சொல்லியிருந்தார். எனவே அந்த பணம் அவரிடம் தான் இருக்கவேண்டும்.
அந்த பணம் நாட்டின் கஜானாவுக்கு வந்து சேர்ந்து விட்டதா என்பதை குடியரசுத் தலைவரும், தலைமை நீதிபதியும்கண்டறிய வேண்டும். பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றார்.
பாஜக மறுப்பு:
இந்த குற்றச்சாட்டிற்கு பாஜக மறுப்பு தெரிவித்தள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில்,
இது மகா அபத்தமான குற்றச்சாட்டு. தேர்தல் நேரத்தில் இது கூறபட்டுள்ளதால், தெல்கி வழக்கறிஞரின் நம்பகத்தன்மை குறித்தே சந்தேகம் வந்துள்ளது. இவை முழுக்க முழுக்க அரசியல்ரீதியாக புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றார்.












Click it and Unblock the Notifications