ஹாக்கி: தொடரை வென்றது பாகிஸ்தான்
அமிர்தசரஸ்:
இன்று நடைபெற்ற 7வது ஹாக்கிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவைத் தோற்கடித்ததன் மூலம்8 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 8 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கி தொடர் நடந்து வருகிறது.முதல் கட்டமாக பாகிஸ்தானில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில்முன்னிலை பெற்றது.
இரண்டாம் கட்ட தொடரில் டெல்லியில் நடந்த ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் 3-1 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது. சண்டிகரில் நடைபெற்ற ஆறாவது போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
தொடரை சமன் செய்ய அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் இன்றுநடைபெற்ற போட்டியில் இந்தியா களமிறங்கியது. ஆனால் 2-1 என்ற கணக்கில் இந்தப் போட்டியையும்பாகிஸ்தான் அணி வென்றது.
பாகிஸ்தான் அணியின் சார்பில் சோஹைல் அப்பாஸ், ரேஹன் பட் ஆகியோர் தலா ஒரு கோலும், இந்தியஅணியின் சார்பில் அர்ஜூன் களப்பா ஒரு கோலும் அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 4-1 என்ற கணக்கில் போட்டித் தொடரையும் பாகிஸ்தான் வென்றது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications