இராக்: பிரிட்டிஷ் பிணைக் கைதியும் கொலை
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
இராக்கில் இரு அமெரிக்கர்களுடன் கடத்திச் செல்லப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கென்னட் பிகிலியையும் தீவிரவாதிகள் தலையை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இரு அமெரிக்கர்கள், பிரிட்டிஷ் நபரை 3 வாரங்களுக்கு முன் கடத்திய தீவிரவாதிகள், இராக் சிறைகளில் உள்ள பெண் தீவிரவாதிகளைவிடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதை அமெரிக்கா ஏற்க மறுத்ததால் இரு அமெரிக்கர்களையும் உடனே கொன்றனர்.
ஆனால், பிக்லியை விட்டு வைத்த தீவிரவாதிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். தீவிரவாதிகளின்கோரிக்கைகளுக்கு பிரிட்டிஷ் அரசு பணிய மறுத்துவிட்டதையடுத்து பிக்லியையும் கொன்றுள்ளனர்.
பிக்லி தலை வெட்டிக் கொல்லப்படும் வீடியோவை அபுதாபி தொலைக்காட்சிக்கு தீவிரவாதிகள் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அதைஅத் தொலைக்காட்சி ஒளிபரப்ப மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications