இந்தியா 217 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
பெங்களூர்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 217ரன்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தது.
கடந்த 3 மாதங்களாக தோல்வி மேல் தோல்விடைந்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆசியக் கோப்பைபோட்டியில் தோல்வி, முத்தரப்பு தொடர் தோல்வி, மினி உலகக் கோப்பையில் லீக் போட்டியிலேயேவெளியேற்றம் என வரிசையாக தோல்வியைச் சந்தித்த இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன்டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் முதல் போட்டியில் 217 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியைச் சந்தித்துள்ளது.
பெங்களூரில் கடந்த 6ம் தேதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 474ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளார்க் 151 ரன்களும், கில்கிறிஸ்ட் 104 ரன்களும் எடுத்தனர். இந்திய அணிசார்பில் ஹர்பஜன் சிங் 5 விக்கெட்களும், கும்ப்ளே 3 விக்கெட்களும் எடுத்தனர்.
தொடர்ந்து பேட் பிடித்த இந்தியா 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாகபார்த்தீவ் பட்டேல் 46 ரன்களும், சவுரவ் கங்குலி 45 ரன்களையும் எடுத்தனர்.
இந்தியாவுக்கு பாலோ ஆன் கொடுக்காமல் அடுத்த பேட் செய்த ஆஸ்திரேலியா மளமளவென விக்கெட்களைஇழந்து 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்பஜன் சிங் அபாரமாகப் பந்து வீசி ஆறு விக்கெட்களை சாய்த்தார்.
456 என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட ஆரம்பித்தது இந்திய அணி. வெற்றியடையமுடியாவிட்டாலும், டிரா செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்வரிசை வீரர்கள் பொறுப்பற்ற முறையில்ஆடி அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
டிராவிட் மட்டும் பொறுமையாக ஆடிக் கொண்டிருக்க அடுத்த வந்த மத்திய வரிசை ஆட்டக்காரர்களும்ஆட்டமிழந்தனர். இந் நிலையில் டிராவிட்டுடன் ஜோடி சேர்ந்த பதான் பொறுப்பான ஆட்டத்தைவெளிப்படுத்தினார். டிராவிட் 60 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, இந்தியாவின் தோல்வி உறுதியானது.
இருப்பினும் கடைசி நேரத்தில் பதான், ஹர்பஜன் சிங் ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பெரும்நெருக்கடியைத் தந்தது. இறுதியில் அவர்களும் அவுட்டாக இந்தியா 217 ரன்கள் வித்தியாசத்தில்தோல்விடைந்தது. தொடக்க ஆட்டத்திலேயே 151 ரன்கள் எடுத்த கிளார்க் ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்திய கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் 400விக்கெட்களை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல் டிராவிட் பிடித்தவார்னேயின் கேட்ச் அவரது 100வது கேட்ச்சாகும்.
ஷேவாக்குக்கு அபராதம்:
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷேவாக் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக அம்ப்யர்அறிவித்தார். அதை ஏற்க மறுத்த ஷேவாக் அம்ப்யருடன் வாக்குவாதம் செய்தார். அதற்காக அவரது சம்பளத்தில்65 சதவீதத்தை அபராதமாக பிடிக்க போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே உத்தரவிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications