தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்: கருணாநிதி
சென்னை:
செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட வேண்டும்.இதுதான் எனது லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட பாடுபட்டதற்காக கருணாநதிக்கு தமிழ் மொழி அகாடமி சார்பில்சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருணாநிதி ஏற்புரையாற்றினார். அப்போது, அரசின் ஆதரவு இருந்தால்தான் எந்த ஒருமொழியும் வளர முடியும், ஒளிர முடியும். இப்போதைய மத்திய அரசின் முயற்சியால்தான் தமிழ் செம்மொழியாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலத்து ராஜராஜசோழனும், பல்லவ மன்னர்களும் தமிழ் மொழிக்காக பாடுபட்டதை விட சமஸ்கிருதமொழிக்காக பாடுபட்டதே அதிகம்.
தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், மாநிலத்தில் கட்டாய மொழியாகவும் அறிவிக்க திமுக பாடுபடும்,கடுமையாக உழைக்கும். தமிழ் மட்டுமல்லாமல், அட்டவணையில் இடம் பெற்றுள்ளஅனைத்து அங்கீகரிக்கப்பட்டமொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழியாக அறிவிக்க திமுக முயற்சிக்கும்.
கர்நாடகத்தில் கன்னடம் கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழகத்திலும் தமிழ் கட்டாயமொழியாக்கப்பட வேண்டும் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, கவிஞர்கள் சுரதா, வைரமுத்து, எம்ஜிஆர் கழகத் தலைவர்ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக் கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் வா.சே.குழந்தைச்சாமி, சிலம்பொலி செல்லப்பன் உள்ளிட்டோர் கருணாநிதியை வாழ்த்திப்பேசினர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications