ஜெ. ஆட்சியை அகற்றுவதே குறிக்கோள்: வைகோ
பல்லடம்:
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை அகற்றுவதே மதிமுகவின் இலக்கு என்று அக் கட்சியின்பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக சார்பில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் மறுமலர்ச்சிமாநாடு பல்லடத்தில் 2 நாட்கள் நடந்தது.அதில் வைகோ பேசியதாவது:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம், மதிமுககொடுத்த அதே வாசகங்களுடன் அப்படியே இடம் பெற்றது.
அண்ணாவின் கனவு திட்டத்திற்கு உயிர் கொடுத்தது மதிமுக என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த திட்டம்வந்தால் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார கட்டமைப்பு உயரும். இத் திட்டத்தை நிறைவேற்றும் துறையின்அமைச்சராக டி.ஆர். பாலு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அரசியலில் இருந்து போயஸ் தோட்டத்து ஆட்சியை நிரந்தரமாக அகற்றுவதுதான் மதிமுகவின் ஒரே இலக்கு.அதற்காக மதிமுக தனது சக்தி, ஆற்றல், சொல், பலம் அனைத்தையும் பயன்படுத்தும். திமுக தலைவர் கருணாநிதிதலைமையிலான அணியை வெற்றி பெற வைக்க மதிமுக எந்த தியாகத்தையும் செய்யும்.
1 ஏக்கர் விவசாய நிலம் ரூ.2,000த்திற்கு விற்கப்படுகிற அளவிற்கு தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமைஉள்ளது. குடிக்க, பாசனம் செய்ய தண்ணீர் இல்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்து, புதிய கடனை வழங்கவேண்டும். ரசாயன உரம் மற்றும் மருந்துகளை அரசு பயன்படுத்த சொன்னதால் நிலம் கெட்டு விட்டது. எனவேஅரசுதான் விவசாயிக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்.
விவசாயிக்கு ஆபத்து வந்தால் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நாம் கலகம் செய்தால் ராணுவம் வந்தாலும்அதைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு முதலில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள்சக்தியை திரட்டும் முயற்சியில் மதிமுக ஈடுபட்டுள்ளது.
வங்கிகள் கடன் கொடுக்கும் என்று நிதியமைச்சர் சொல்கிறார். ஆனால் எந்த வங்கியும் அவ்வாறு தரவில்லை.விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு கடன் வழங்க எந்த இன்சூரன்ஸ் அதிகாரியும் தயாராக இல்லை.
என் தொண்டர் மீது துரும்பு விழக் கூட நான் சம்மதிக்க மாட்டேன். என்னை பலியிட்டாவது என்தொண்டர்களை பாதுகாப்பேன். என்னோடு வந்தால் ரத்தம், கண்ணீர், வியர்வைதான் கிடைக்கும். ஆனால்இறுதியில் வெற்றி கிடைக்கும். எனவே இளைஞர்களை அனுப்பி வையுங்கள். நான் பாதுகாப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications