மகாராஷ்டிரா தேர்தல்: வாக்குப் பதிவு முடிந்தது

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுஅமைதியாக நடந்து முடிந்தது. ஆரம்ப கட்ட கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் சுமார் 50 சதவீத வாக்குகளேபதிவாகியுள்ளன.

காலையில் மிக மிக மந்தமாகத் துவங்கிய வாக்குப் பதிவு பிற்பகலில் ஓரளவுக்கு சுறுசுறுப்பானது.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 2,678 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 64,390 வாக்குச் சாவடிகளில் இன்றுகாலை 7.30 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இத் தேர்தலில் 82,000மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

காங்கிரஸ் கட்சி சார்பில் 157 பேரும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 124 பேரும், சிவசேனா சார்பில் 163 பேரும்,பாஜக சார்பில் 111 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 272 பேரும் தேர்தலில் போட்டியிட்டனர். 1 லட்சத்திற்கும்அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விதப்ரா பகுதியில் கட்சிரோலி என்ற இடத்தில் தேர்தலை நிறுத்த முயன்ற நக்ஸலைட்டுகளுக்கும் போலீசாருக்கும்இடையே துப்பாக்கிச் சண்டைஏற்பட்டது. இதனால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

மும்பை நாகபாடாவில் வாக்குப் பதிவு மையத்தின் வெளியே இனிப்பு வாங்கி சாப்பிட்ட 60 காங்கிரஸ் மற்றும்தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். அந்த இனிப்பு கெட்டுப் போனதால்வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இடைத் தேர்தல் வன்முறை: 3 பேர் பலி

இதுதவிர, நாடு முழுவதும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் 39 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

பிகாரில் மாதேபுரா, உத்தரப் பிரதேசத்தில் மெயின்புரி, கர்நாடகத்தில் பீதர் ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும்இன்று இடைத் தேர்தல் நடந்தது.

அதேபோல் உத்தரப் பிரதேசம் (12), குஜராத் (5), ஆந்திரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி (தலா2), ஜம்மு மற்றும் காஷ்மீர் (4), நாகாலாந்து (3), அசாம், கோவா, இமாசலப் பிரதேசம், உத்தராஞ்சல், மணிப்பூர்(தலா 1) ஆகிய இடங்களிலும் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்றது.

மெயின்புரி தொகுதியில் முகல்புரா என்ற கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர்பலியானார்கள். உத்தரப் பிரதேச தேர்தல் வன்முறையில் ஒருவர் இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+