சென்னையில் இன்று முதல் குழாய்களில் வீராணம் நீர்
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தின் கீழ் சென்னை நகர மக்களுக்கு இன்று பிற்பகல் முதல் குழாய்கள் மூலம் ஒரு நாள் விட்டுஒரு நாள் வீராணம் ஏரியிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால்,சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும்வறண்டு விட்டன. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதுநிறுத்தப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய வீராணம் திட்டத்தை நான் அமல்படுத்தினேன். இதைவீணான திட்டம் என்று அப்போது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இருப்பினும் தமிழக அரசு இந்த கிண்டல்களைப்பொருட்படுத்தாமல் புதிய வீராணம் திட்டத்தை வேகப்படுத்தியது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய்கிணறுகள் மூலம் தினசரி 9 கோடி லிட்டர் தண்ணீர் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் சென்னைக்கு குழாய்கள் மூலம்கொண்டு வரப்பட்டன.
இதன் மூலம் சென்னை நகரில் ஏற்பட்டிருக்க வேண்டிய மிகப் பெரிய குடிநீர்ப் பஞ்சம் தவிர்க்கப்பட்டது. மக்கள்நகரை விட்டு வெளியேறும் அவல நிலையும் தவிர்க்கப்பட்டது. தற்போது வீராணம் ஏரி வேகமாக நிரம்பிவருகிறது. இதன் மூலம் புதிய வீராணம் திட்டம் முழு வெற்றியைப் பெற்று பலனை அளிக்கும் நேரம் வந்துவிட்டது.
இன்று காலை முதல் வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் 18 கோடி கன அடி நீர் சென்னைக்கு வந்துகொண்டுள்ளது. இதனால் இன்று பிற்பகல் முதல் சென்னை நகரில் உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மூலம் ஒரு நாள்விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும். கடைக்கோடி பகுதிகளுக்கு தொடர்ந்து லாரிகள் மூலம் குடிநீர்விநியோகம் செய்யப்படும்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றியதால்தான் இந்தவெற்றி நிலை உருவாகியுள்ளது. இல்லாவிட்டால் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது என்பதுகனவாகவே இருந்திருக்கும்.
புதிய வீராணம் திட்டத்தால் வீராணம் பகுதி விவசாயிகள் பாதிப்படைய மாட்டார்கள். கல்லணையிலிருந்துவீராணம் ஏரிக்குக் கூடுதலாக விடப்படும் நீர்தான் தற்போது சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவேஇதனால் விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை.
சென்னைக்கு தேவையான 84 கோடி லிட்டர் தண்ணீரைப் பெற, புதிய வீராணம் திட்டம், கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டம், கிருஷ்ணா நீர் ஆகிய திட்டங்களின் மூலம் பெற கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications