மதுரையில் 4,000 நகை கடைகள் மூடல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை நகைக் கடை அதிபரை நாமக்கல் போலீஸார் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதைக் கண்டித்து மதுரையில் 4,000நகைக் கடைகளை மூடி நகைக் கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மதுரை கான்சாமேடு பகுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் லட்சுமணன் செட்டியார். இவரது கடைக்கு நாமக்கல்லைச் சேர்ந்தசில போலீஸார் சீருடை இல்லாமல் வந்தனர்.

விசாரணைக்காக வருமாறு கூறி அவரை காவலர்கள் அழைத்தனர். ஆனால் லட்சுமணன் செட்டியார் வர மறுத்தார். ஆனால்போலீஸார் அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி கைதுசெய்வதாக தெரிவித்தனர்.

இந்தத் தகவல் மதுரை நகைக் கடை அதிபர்களிடையே பரவியதும், நகைக் கடை அதிபர்கள் சங்கத்தில் அவசர ஆலோசனைநடந்தது. பின்னர் லட்சுமணன் செட்டியார் திரும்பி வரும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து கடைகள்அனைத்தும் மூடப்பட்டன.

சுமார் 4,000 கடைகளை மூடி நகைக் கடை அதிபர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், லட்சுமணன் செட்டியார் திரும்பிவராததால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+